தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Electricity Tariff: ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? - தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்!

Electricity Tariff: ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? - தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்!

Jun 11, 2024 09:13 AM IST Karthikeyan S
Jun 11, 2024 09:13 AM , IST

  • தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற தகவல் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்த தகவலில் உண்மையில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

(1 / 5)

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மின் கட்டண உயர்வு தொடர்பான பதிவுகளை மறுபதிவு செய்து தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

(2 / 5)

இந்த தகவல்களை தற்போது தமிழ்நாடு அரசு, மின்வாரியம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.

(3 / 5)

ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது. தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது.

(4 / 5)

"ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே. 2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்