Sakthi Vasu: நான் பல இடங்களில் கெட்டவனாக புரொஜெக்ட் செய்யப்பட்டிருக்கிறேன்.. நடிகர் ஷக்தி உருக்கம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sakthi Vasu: நான் பல இடங்களில் கெட்டவனாக புரொஜெக்ட் செய்யப்பட்டிருக்கிறேன்.. நடிகர் ஷக்தி உருக்கம்

Sakthi Vasu: நான் பல இடங்களில் கெட்டவனாக புரொஜெக்ட் செய்யப்பட்டிருக்கிறேன்.. நடிகர் ஷக்தி உருக்கம்

Sep 18, 2024 06:50 PM IST Marimuthu M
Sep 18, 2024 06:50 PM , IST

  • Sakthi Vasu: நான் பல இடங்களில் கெட்டவனாக புரொஜெக்ட் செய்யப்பட்டிருக்கிறேன் என நடிகர் ஷக்தி உருக்கமாகப் பேசியுள்ளார். 

தான் நிறைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டேன் என நடிகர் ஷக்தி பிஹைண்ட் வுட்ஸ்-க்கு பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ்க்கு அவர் அளித்த பேட்டியில், ‘’ நான் சீக்கிரம் ஜெயித்திருந்தால் வெற்றி என்பது பெரிய விஷயமாக இல்லாமல் இருந்திருக்கும். ஏனென்றால், சின்ன வயதில் இருந்தே தோல்வியைப் பார்த்தவன் கிடையாது. நன்றாகப் படிச்சு எம்.பி.ஏ.வரை வந்திருக்கேன். தோல்வியைப் பார்த்தது கிடையாது. சினிமாவில் தான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். 25 வயது வரை உற்சாகமாக இருந்தேன். அது இந்த 8 முதல் 9 ஆண்டுகளில், வெளியில் போய்விட்டது..

(1 / 6)

நான் பல இடங்களில் கெட்டவனாக புரொஜெக்ட் செய்யப்பட்டேன் - நடிகர் ஷக்திநான் பல இடங்களில் கெட்டவனாக புரொஜெக்ட் செய்யப்பட்டிருக்கிறேன். எனக்கு திமிர் எல்லாம் கிடையாது. நான் யார் வம்புக்கும் போகமாட்டேன். நிறையபேர் பூட்டிட்டு செய்யிற விஷயத்தை, நான் கதவைத் திறந்துகிட்டு பண்ணுனேன். அது என்னோட கெட்டநேரம். அப்போது படமெடுக்க நிறைய பேர் ரூம்முக்குள்ளேயே வந்திட்டாங்க. முதலில் சந்தோஷத்துக்கு குடிக்கிறவங்க இருப்பாங்க. அடுத்த நாள் வேலைக்குப் போயிடுவாங்க. இரண்டாவது, சில பேர் பணத்திமிரில் குடிப்பாங்க. மூன்றாவது, சந்தர்ப்பம் சூழ்நிலைகள் கஷ்டத்தில் விரக்தியில் குடிக்கிறவங்க இருப்பாங்க. அவன் நிறுத்துறது கஷ்டம். எனக்கு திமிர் கிடையாது. என் கஷ்டம் என்னங்கிறது குடும்பத்துக்குத் தெரியும். அந்த கடவுளுக்குத் தெரியும்.

(2 / 6)

அதன்பின், என் குடும்பத்துக்காக அதில் இருந்து வந்தாச்சு. இப்போது வேலை,வேலை, வேலை மட்டும் தான். என்னை எல்லாருக்குமே பிடிக்கணும்னு அவசியம் இல்லை. பிடிக்கிறவங்களுக்குப் பிடிச்சால் போதும். என்னைப் பலர் விமர்சிக்கலாம். நான் தவறு பண்ணினால், மனதார மன்னிப்புக்கேட்டிருக்கிறேன். என் அப்பாகிட்டயிருந்து கத்துக்கிட்டது, மோட்டிவேஷன் தான். நான் திரும்பவருவேன்னு சொல்வார். அவரே அப்படி சொல்லும்போது, நான் நிறைய கஷ்டங்கள், தனிப்பட்ட பெர்ஷனல் பிரச்னைகள் எல்லாத்தையுமே பார்த்திட்டேன்’’ என மனதில் இருந்து பேசினார் நடிகர் ஷக்தி.

(3 / 6)

அதன்பின் தன் தந்தை பி.வாசு பற்றி பேசிய நடிகர் சக்தி, ’’எதைப் பத்தியும் கவலைப்படாத. உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போய்க்கிட்டே இரு. காலம் மிகப்பொன்போன்றது அப்படின்னு அப்பா சொல்வார். ஒரு 5 வருடங்கள் எனக்கு மிகவும் கஷ்டமான காலகட்டம் இருந்தது. ஒரு நாள் ரஜினி சார் கால் பண்ணுனார். விடுங்க விடுங்க எல்லாம் சரியாகும். எனக்கு மன அழுத்தம் வந்திருக்கு. நானும் என்னைக் குறைச்சி ஃபீல் பண்ணியிருக்கேன். அது எல்லாருக்கும் வந்து இருக்கும். திரும்பி வந்துடுவீங்க. வாங்க. மறுநாள் என்னை அவர் வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தார். 

(4 / 6)

நானும் பயந்துகிட்டே போனேன். அங்கப்போனால், என்னை ஆறுதல் படுத்திறார், எனக்கு நடக்காததா.. மற்றவர்களுக்கு நடக்காததா அப்படின்னு ஆறுதல் படுத்துறார். இதையெல்லாம் தாண்டி வந்தால் தான் அவன் நடிகன். இல்லையென்றால், அவன் வேஸ்ட் தான்.

(5 / 6)

நீ யாரோட பையன். அப்பா பெயரைக் காப்பாத்தணும். அப்பா பெயரை காப்பாத்தணும்னு பேசுறார். அப்போது எனக்கு கண்கள் கலங்குது. அவர் அப்படி சொல்லணும்னு அவசியம் இல்லை. நான் என்னதான் கமல் சார் ரசிகனாக இருந்தாலும், நான் உங்கவீட்டுப்பிள்ளை சார்ன்னு சொன்னேன். உடனே சூப்பர்.. சூப்பர் அப்படின்னு டக்குன்னு சொல்லிட்டார்.’’ என நெகிழ்ந்தார், நடிகர் ஷக்தி.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்