தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  T20 World Cup: 2024 உலகக் கோப்பையில் ஆஸி.,க்கு ஆப்பு வைத்த ஆப்கன்.. எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி?

T20 World Cup: 2024 உலகக் கோப்பையில் ஆஸி.,க்கு ஆப்பு வைத்த ஆப்கன்.. எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி?

Jun 25, 2024 11:04 AM IST Manigandan K T
Jun 25, 2024 11:04 AM , IST

  • T20 World Cup: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்தப் போட்டிகள் எப்போது நடைபெறவுள்ளன என்ற விவரத்தை பார்க்கலாம்.

செயின்ட் வின்சென்டில் உள்ள ஆர்னோஸ் வேல் ஸ்டேடியத்தில் திங்களன்று மழையால் பாதிக்கப்பட்ட மோதலில் பங்களாதேஷுக்கு எதிராக எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பெற்ற ஆப்கானிஸ்தான் முதல்முறையாக டி 20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது.. (AP Photo/Ricardo Mazalan)

(1 / 7)

செயின்ட் வின்சென்டில் உள்ள ஆர்னோஸ் வேல் ஸ்டேடியத்தில் திங்களன்று மழையால் பாதிக்கப்பட்ட மோதலில் பங்களாதேஷுக்கு எதிராக எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பெற்ற ஆப்கானிஸ்தான் முதல்முறையாக டி 20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது.. (AP Photo/Ricardo Mazalan)(AP)

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. வங்கதேசத்தின் அற்புத பவுலிங்குக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க தடுமாறினார்கள்(AP Photo/Ricardo Mazalan)

(2 / 7)

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. வங்கதேசத்தின் அற்புத பவுலிங்குக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிக்க தடுமாறினார்கள்(AP Photo/Ricardo Mazalan)(AP)

116 ரன்கள் என்ற குறைவான இலக்கை சேஸ் செய்த வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் என எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கிபோது 19 ஓவரில் 114 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாறியது.(AP Photo/Ricardo Mazalan)

(3 / 7)

116 ரன்கள் என்ற குறைவான இலக்கை சேஸ் செய்த வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் என எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கிபோது 19 ஓவரில் 114 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாறியது.(AP Photo/Ricardo Mazalan)(AP)

17.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தபோது லேசான சாரல் மழை பெய்து சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்று ஆப்கானிஸ்தான் அணி இருந்தபோது, சிறப்பாக பவுலிங் செய்து ஸ்டிரைக்கில் இருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் விக்கெட்டை வீழ்த்தியது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் வெற்றியால் ஆஸ்திரேலியா அணியும் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. Monday, June 24, 2024. (AP Photo/Ricardo Mazalan)

(4 / 7)

17.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தபோது லேசான சாரல் மழை பெய்து சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என்று ஆப்கானிஸ்தான் அணி இருந்தபோது, சிறப்பாக பவுலிங் செய்து ஸ்டிரைக்கில் இருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் விக்கெட்டை வீழ்த்தியது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் வெற்றியால் ஆஸ்திரேலியா அணியும் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. Monday, June 24, 2024. (AP Photo/Ricardo Mazalan)(AP)

டிரினிடாட்டில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.(AP Photo/Ricardo Mazalan)

(5 / 7)

டிரினிடாட்டில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.(AP Photo/Ricardo Mazalan)(AP)

வியாழக்கிழமை இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தும், இந்தியாவும் மோதுகின்றன (AP Photo/Ricardo Mazalan)

(6 / 7)

வியாழக்கிழமை இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தும், இந்தியாவும் மோதுகின்றன (AP Photo/Ricardo Mazalan)(AP)

சூப்பர் 8 குரூப் 1 இல் இந்தியா, ஆப்கானிஸ்தான், சூப்பர் 8 குரூப் 2இல் இங்கிலாந்து, சவுத் ஆப்ரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதியில் ஜெயிக்கும் அணிகள் 29ம் தேதி பைனலில் பார்படாஸில் மோதும்.  AP/PTI

(7 / 7)

சூப்பர் 8 குரூப் 1 இல் இந்தியா, ஆப்கானிஸ்தான், சூப்பர் 8 குரூப் 2இல் இங்கிலாந்து, சவுத் ஆப்ரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதியில் ஜெயிக்கும் அணிகள் 29ம் தேதி பைனலில் பார்படாஸில் மோதும்.  AP/PTI(AP)

மற்ற கேலரிக்கள்