T20 World Cup 2024 Records: லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள், விக்கெட்டுகள், சிக்ஸர்கள் எடுத்து சாதித்தவர்கள் யார்?
- T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இதுவரை அதிக ரன்கள், விக்கெட்டுகள், சிறந்த பவுலிங், அதிக கேட்ச்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
- T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இதுவரை அதிக ரன்கள், விக்கெட்டுகள், சிறந்த பவுலிங், அதிக கேட்ச்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
(1 / 8)
அதிக ரன்கள்: ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 போட்டிகள் விளையாடி 167 ரன்கள் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிக்கோலஸ் பூரான் 164, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 156 ரன்கள் எடுத்துள்ளனர்
(2 / 8)
ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள்: வெஸ்ட் இண்டீஸ் இடது கை பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த 98 ரன்களே ஒரு இன்னிங்ஸில் பேட்ஸ்மேன் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது
(3 / 8)
அதிக அரைசதம்: ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன் பான்டன் மெக்முல்லன், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மனுல்ல குர்பாஸ் ஆகிய ஆகிய அனைவரும் தலா இரண்டு சதங்கள் அடித்துள்ளனர். இதில் ஸ்டொய்னிஸ் மூன்று இன்னிங்ஸில் இரண்டு அரைசதமடித்துள்ளார். மற்ற இருவரும் நான்கு இன்னிங்ஸ் விளையாடியுள்ளனர்
(4 / 8)
அதிக சிக்ஸர்கள்: யுஎஸ்ஏ அணியை சேர்ந்த ஆரோன் ஜோன்ஸ் 3 இன்னிங்ஸில் 13 சிக்ஸர்களும், நிக்கோலஸ் பூரான் 4 இன்னிங்ஸில் 13 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் 10 சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேனாக ஆரோன் உள்ளார்
(5 / 8)
அதிக விக்கெட்டுகள் மற்றும் சிறந்த பவுலிங்: ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல் ஃபரூக்கி 12 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். சிறந்த பவுலிங்காக உகாண்டாவுக்கு எதிராக 5/9 எடுத்த பவுலராகவும் ஃபருக்கி உள்ளார்
(6 / 8)
சிறந்த எகானமி: டி20 உலகக் கோப்பை 2024 லீக் போட்டிகளில் மொத்தம் 3 இன்னிங்ஸ் விளையாடி 12 ஓவர்கள் வீசி 36 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளத்தி. இவரது எகானமி 3.00 என உள்ளது
(7 / 8)
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விக்கெட் கீப்பர்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக விக்கெட் கீப்பராக உள்ளார். இவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
மற்ற கேலரிக்கள்