தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Protein Food: மீன், இறைச்சி, முட்டை தவிர புரத தேவையை பூர்த்தி செய்யும் சைவ உணவுகள் இதோ

Protein Food: மீன், இறைச்சி, முட்டை தவிர புரத தேவையை பூர்த்தி செய்யும் சைவ உணவுகள் இதோ

May 16, 2024 06:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 16, 2024 06:56 PM , IST

  • Protein Food: உடல் இயக்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக இருந்து வரும் புரத சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மீன், இறைச்சி போன்ற அசைவம் தவிர சைவத்தில் என்ன உணவுகள் இருக்கின்றன, எவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

புரத சத்து என்றாலே முதலில் தோன்றுவது மீன், இறைச்சி, முட்டை போன்ற உணவுகள் தான். இவை அசைவ உணவாக இருக்கின்றன. சில சைவ உணவுகளிலும் ஏராளமான புரதம் நிறைந்துள்ளன. பால் சார்ந்த உணவுகளில் புரதம் இருந்தாலும் வீகன் டயட் பின்பற்றுவோர், அமிலத்தன்மை பாதிப்பு இருப்போர் அதை பருகுவதில்லை. சைவத்தில் அதிக புரதங்களை கொண்ட உணவுகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்

(1 / 7)

நட்ஸ்: நட்ஸ் வகைகளான பாதாம், முந்திரி, வால்நட் போன்றவை சிறந்த ஸ்நாக்ஸ் உணவாக இருக்கிறது. பாதாமில் 7 கிராம் அளவு புரதம் உள்ளது. இதேபோல் ஒவ்வொரு நட்ஸ்களிலும் போதுமான அளவில் புரதங்கள் இடம்பிடித்துள்ளன. எனவே இவற்றை தவிர்த்தால் புரதச்சத்து குறைபாடு கூட ஏற்படலாம்

(2 / 7)

கொண்டகடலை: மாலை நேர ஸ்நாக்ஸ் அல்லது உணவுக்காந சிறந்த தேர்வாக கொண்டகடலை இருந்து வருகிறது. இன்றளவும் கிராமங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. இதில் 12 கிராம் அளவு புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. உடற்பயற்சிக்கு பின் புரதத்தின் அளவை ஈடுகட்ட பலரும் கொண்டகடலை சாப்பிடுவதுண்டு

(3 / 7)

பூசணி விதைகள்: 30 கிராம் பூசணி விதைகளில் 9 கிராம் அளவில் புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் மீன் மற்றும் இறைச்சிகளை காட்டிலும் அதிக புரதம் கொண்டதாக பூசணி விதைகள் இருக்கின்றன. இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ, வெறும் வியற்றில் சாப்பிடலாம். இதில் புரதத்துடன் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் இடம்பிடித்துள்ளன 

(4 / 7)

குயினோவா விதை: இந்தியாவில் இது பிரபலமாக இல்லாவிட்டாலும் சிலி, பெரு, பொலிவியா ஆகிய நாடுகளில் பிரபலமாக உள்ளது. மிகவும் சிறிய விதைகளாக இருக்கும் இவற்றை சமைத்து சாப்பிடலாம். இதில் 8 கிராம் அளவு புரதம் இருப்பதாக கூறப்படுகிறது

(5 / 7)

கிரேக்க யோகர்ட்: இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஆரோக்கிய உணவாக கிரேக்க யோகர்ட் உள்ளது. வழக்கமான யோகர்ட்க்கு பதிலாக கிரேக்க யோகர்டில் புரதம் அதிகமாக உள்ளது. இவை க்ரீமியாக இருக்கும். எனவே ஸ்மூத்திகளில் மிக்ஸ் செய்து சாப்பிடலாம். இதில் 12.3 மற்றும் 17.3 கிராம் புரதம் இருக்கிறது

(6 / 7)

காட்டேஜ் சீஸ்: வழக்கமான சீஸ்களை காட்டிலும் மிகவும் மிருதுவாக இருக்கும் 100 கிராம் காட்டேஜ் சீஸ்களில் 22 கிராம் புரதம் உள்ளது. முட்டை, மீன், இறைச்சிக்கு பதிலாக இதை உணவாக எடுத்துக்கொள்ளலாம்

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்