Srisailam Dam Flood: பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..! ஆபத்தை உணராமல் பரிசலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்-srisailam dam flood gates closed fishermen ready for fishing in small boats video viral - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Srisailam Dam Flood: பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..! ஆபத்தை உணராமல் பரிசலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

Srisailam Dam Flood: பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..! ஆபத்தை உணராமல் பரிசலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

Aug 13, 2024 08:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 13, 2024 08:45 PM , IST

  • Srisailam Dam Flood: ஆந்திரா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் மேல்பகுதியில் இருந்து வெள்ள நீர் வடிந்ததால் அணையின் கதவுகள் மூடப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் அணையின் கீழக்கரையில் மீன்பிடிக்க தயாராகினர்

அணையின் மேல்மட்டத்தில் இருந்து வெள்ள நீர் வடிந்ததால் ஸ்ரீசைலம் அணையின் கதவுகள் மூடப்பட, சிறிய கட்டுமரங்களிலும், பரிசல்களிலும் கூட்டமாக மீன்பிடிக்க சென்றனர்

(1 / 6)

வெள்ள நீர் வடிந்ததையடுத்து, ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் மீனவர்கள் சிறிய படகுகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். இதுதொடர்பான விடியோக்களும் வெளியாகி வைரலாகியுள்ளன 

(2 / 6)

இந்த விடியோக்களுக்கு லைக்குகள் குவித்த அதே வேளையில், மீனவர்களின் பாதுகாப்பு குறித்து தங்களது அக்கறையை நெட்டிசன்கள் வெளிப்படுத்தியுள்ளனர். விடியோவில் லைப் ஜாக்கெட் இல்லாமல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது குறித்து நெட்டிசன்கள் கவலை தெரிவித்தனர். அதேசமயம் இன்னும் சிலர், மீனவர்களுக்கு நீச்சல் திறமை நன்கு இருப்பதாகவும், அவர்கள் பெரும்பாலும் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் மீன்பிடிப்பில் ஈடுபடுவார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்

(3 / 6)

மேலிருந்து வெள்ளம் வடிந்ததால் ஸ்ரீசைலம் நீர்தேக்கத்தின் ஒன்பது கதவுகளும் திங்கள்கிழமை மாலை மூடப்பட்டன. இதன்பின்னர் அப்பகுதி மீனவர்கள் மறுநாள் காலை மீன்பிடிக்க சென்றனர்

(4 / 6)

இந்த மீனவர்கள் லிங்கலகட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி அணைப்பகுதியில் மீன்பிடிக்க சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ள நீரில் பெரும் அளவிலான நீர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவை சுவை மிகுந்ததாகவும் இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

(5 / 6)

துங்கபத்ரா அணை 19வது கதவணை அடித்து செல்லப்பட்டதால், சுங்கேசுலா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுங்கேசுலாவில் இருந்து ஸ்ரீசைலத்துக்கு விநாடிக்கு 77,598 கனஅடி நீர்வரத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்