குளிர்காலத்தில் வறண்டு போகும் உதட்டை சாஃப்ட் ஆக்குங்கள்! சிறப்பான ரெமெடிகள் தயார்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குளிர்காலத்தில் வறண்டு போகும் உதட்டை சாஃப்ட் ஆக்குங்கள்! சிறப்பான ரெமெடிகள் தயார்!

குளிர்காலத்தில் வறண்டு போகும் உதட்டை சாஃப்ட் ஆக்குங்கள்! சிறப்பான ரெமெடிகள் தயார்!

Nov 22, 2024 03:32 PM IST Suguna Devi P
Nov 22, 2024 03:32 PM , IST

  • மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கப் போகிறது. இந்த சிறப்பான காலம் வந்தாலே உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும். இதனை நாம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே எளிமையாக சரி செய்யலாம். 

குளிர்காலத்தில் உதடுகளில் சிறு சிறு வெடிப்புகள் உண்டாகும். இவைகலை கந்துக்கொள்ளாமல் விட்டால் வெடிப்புகள் விரிவடைந்து பெரிய புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை ஆரம்ப கட்டத்திலேயே குணமாக்கும் பல பொருட்கள் நமது வீடுகளிலேயே உள்ளன. 

(1 / 7)

குளிர்காலத்தில் உதடுகளில் சிறு சிறு வெடிப்புகள் உண்டாகும். இவைகலை கந்துக்கொள்ளாமல் விட்டால் வெடிப்புகள் விரிவடைந்து பெரிய புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை ஆரம்ப கட்டத்திலேயே குணமாக்கும் பல பொருட்கள் நமது வீடுகளிலேயே உள்ளன. (Pixabay)

குளிர்காலம் வந்து விட்டால், சருமம் மற்றும் உதடுகளில் தான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். உதடுகளில் உள்ள தோல் மற்ற சருமத்தை விட மெல்லியதாக இருக்கும். உதடுகளில் உள்ள தோலில் வியர்வை சுரப்பிகள் அல்லது பிற மயிர்க்கால்கள் இல்லை, எனவே ஈரப்பதத்தைத் தக்கவைக்க வழி இல்லை. எனவே நாமே சில வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவை என்னவென்று பார்ப்போம்.

(2 / 7)

குளிர்காலம் வந்து விட்டால், சருமம் மற்றும் உதடுகளில் தான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். உதடுகளில் உள்ள தோல் மற்ற சருமத்தை விட மெல்லியதாக இருக்கும். உதடுகளில் உள்ள தோலில் வியர்வை சுரப்பிகள் அல்லது பிற மயிர்க்கால்கள் இல்லை, எனவே ஈரப்பதத்தைத் தக்கவைக்க வழி இல்லை. எனவே நாமே சில வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவை என்னவென்று பார்ப்போம்.(Pexel)

உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த வழி. உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. எனவே, தேங்காய் எண்ணெய் தடவுவதால் உதடுகளில் தோல் வெடிப்பு ஏற்படாது. இதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து உதடுகளில் நன்றாக தடவவும். நீங்கள் விரும்பினால் சிறிது மசாஜ் செய்யலாம். இது சரும வறட்சியைத் தடுக்கும்.

(3 / 7)

உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த வழி. உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. எனவே, தேங்காய் எண்ணெய் தடவுவதால் உதடுகளில் தோல் வெடிப்பு ஏற்படாது. இதற்கு சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து உதடுகளில் நன்றாக தடவவும். நீங்கள் விரும்பினால் சிறிது மசாஜ் செய்யலாம். இது சரும வறட்சியைத் தடுக்கும்.(Pixabay)

உதடுகளின் வறட்சி மற்றும் வெடிப்பைத் தடுக்க வெள்ளரிக்காய் சாறு சிறந்தது. வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலவையை தினமும் காலை மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உதடுகளில் தடவுவது உதடுகளின் நிறம் மற்றும் வறட்சியைத் தடுக்க உதவும்.

(4 / 7)

கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு சிறந்தது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் வீட்டில் வளர்க்கப்படும் கற்றாழை அல்லது கடையில் வாங்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். இது உதடுகளை மென்மையாக்கவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது.

(5 / 7)

வறண்ட உதடுகளுக்கு நெய் சிறந்தது. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை நெய் தடவலாம். இரவில் படுக்கும் முன் உதடுகளில் சிறிது நெய் தடவி வந்தால் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

(6 / 7)

வறண்ட உதடுகளுக்கு நெய் சிறந்தது. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை நெய் தடவலாம். இரவில் படுக்கும் முன் உதடுகளில் சிறிது நெய் தடவி வந்தால் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

வறண்ட சருமத்திற்கு ரோஸ் வாட்டர் சிறந்தது. உதடுகளில் ரோஸ் வாட்டரை தினமும் தடவி வந்தால் வறட்சி நீங்கும். ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து தடவினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். இது ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தப்படலாம். ரோஸ் வாட்டர் வறட்சியை போக்கவும், உதடுகளுக்கு நிறத்தை சேர்க்கவும் சிறந்தது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்