ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்! பின்னணியில் பாஜக பெண் நிர்வாகியா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Jul 18, 2024 08:04 PM IST Kathiravan V
Jul 18, 2024 08:04 PM , IST

  • Armstrong murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக சந்தேகிக்கப்படும் ரவுடி சம்போ செந்தில் உடன் வழக்கறிஞர் ஹரிஹரன் தொடர்பில் இருந்து உள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிரபல ரவுடி ‘சம்போ செந்தில்’ ஸ்கெட்ச் போட்டு கொடுத்து உள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்து உள்ளது. 

(1 / 8)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே கொலை செய்யப்பட்டார். 

(2 / 8)

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் திருவேங்கடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

(3 / 8)

நேற்றைய தினம் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், தாமக கட்சியை சேர்ந்த ஹரிஹரன், அதிமுகவை சேர்ந்த மலர் கொடி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் பாஜகவை சேர்ந்தவரும், பிரபல ரவுடியுமான அஞ்சலை தலைமைமறைவாகி உள்ளார். 

(4 / 8)

இந்த நிலையில் தாமகவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரனை அக்கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.

(5 / 8)

 மேலும் அதிமுகவை சேர்ந்த மலர் கொடியை அக்கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.  

(6 / 8)

வழக்கறிஞர் ஹரிஹரன் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் மச்சான் அருள் உடன் தொடர்பில் இருந்து உள்ளார். ஆற்காடு சுரேஷ் உடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படும் அஞ்சலையும் இந்த சம்பவத்திற்கு பண உதவி செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

(7 / 8)

 ஆனால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சொல்லி சம்போ செந்திலுக்கு உத்தரவிட்டது யார்  என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் உள்ளது. கொலையாளிகளுக்கு இருசக்கர வாகனம், கத்தி, போக்குவரத்து செலவுக்கு அஞ்சலை உதவி செய்து உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து கூறப்படுகின்றது. 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்