கடகத்தில் ஏறி அமர்ந்த செவ்வாய்.. கடுகடுப்பை மாற்றி பவ்யமாக செயல்பட வேண்டிய சில ராசிகள்
- கடகத்தில் ஏறி அமர்ந்த செவ்வாய் பகவானால், கடுகடுப்பை மாற்றி பவ்யமாக செயல்பட வேண்டிய சில ராசிகள் குறித்துக் காண்போம்.
- கடகத்தில் ஏறி அமர்ந்த செவ்வாய் பகவானால், கடுகடுப்பை மாற்றி பவ்யமாக செயல்பட வேண்டிய சில ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 10)
Lord Mars: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.அக்டோபர் 2024-ல் கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் இணைவுகள் காரணமாக, மக்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய சாதகமான காலமாக இருக்கும். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக இருப்பவர், செவ்வாய். இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
(2 / 10)
தைரியத்தையும் கம்பீரத்தினையும் தரும் செவ்வாய் பகவான், தீபாவளிக்கு முன்னதாக, கடந்த அக்டோபர் 20ஆம் தேதி மதியம் 2:22 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சென்றுள்ளார்.கடகத்தில் செவ்வாய்ப்பெயர்ச்சியால் சில ராசியினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
(3 / 10)
கடகத்தில் செவ்வாய்ப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்கும் ராசிகள்:மேஷம்: கடகத்தில் செவ்வாய்ப்பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு உவப்பான பயன்களைத் தருவதில்லை. இந்த காலத்தில் மேஷ ராசியினருக்கு கோபம் அதிகம் வரும். தொழிலில் தேவையற்ற மன உளைச்சல் உண்டாகி தலைவலி உருவாகலாம். இந்த சமயத்தில் மேஷ ராசியினர், அவரது தாயார் உடல்நிலையில் அக்கறையாக நடந்துகொள்ளவேண்டும். இந்த செவ்வாய் பெயர்ச்சியில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கமாட்டீர்கள்.
(4 / 10)
ரிஷபம்: கடகத்தில் செவ்வாய்ப்பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு அசுப பலன்களையே தருகின்றன. ரிஷப ராசியினருக்கு இந்த காலத்தில் பணிகளில் புரொமோஷன் கிடைத்தாலும், உங்கள் பணி வாழ்வில் சில மன அழுத்தத்தைச் சந்திக்கலாம். தொழில் செய்பவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் கிடைக்காது.
(5 / 10)
மிதுனம்:கடகத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி, மிதுன ராசியினருக்கு சோதனைக்காலத்தையே தருகிறது. உங்கள் கடும் வார்த்தைகளால் பலரது உறவினை இழக்கலாம். எனவே, நிதானம் தேவை. இந்த தருணத்தில் கடன் பெறவோ, ஜாமீன் கையெழுத்துப் போடாமல் இருப்பதையோ உறுதிசெய்யவேண்டும். எதிரிகளும் போட்டியாளர்களும் இந்தக் காலத்தில் உங்களது நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க முயற்சிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனமும், பயணத்தில் எச்சரிக்கையுடனும் இருக்க வலியுறுத்தப்படுகிறது.
(6 / 10)
கடகம்:கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, கடக ராசியினருக்கு கோபத்தை அதிகப்படுத்தலாம். உங்களுக்கு வருவாய் ஒருபக்கம் கிடைத்தால், மறுபக்கம் செலவாகிக் கொண்டு தான் இருக்கும். திருமண வாழ்க்கையில் இல்வாழ்க்கைத்துணையுடன் சின்னஞ்சிறு கருத்துவேற்றுமை வந்துபோகும். வீட்டைவிட்டு வெளியில் சென்று பயணிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(7 / 10)
சிம்மம்: கடக ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி, மருத்துவச் செலவுகளை உண்டு செய்யும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்தக் காலத்தில் நீங்கள் எடுக்கும் பணிகள், மிகுந்த போராட்டங்களுக்குப் பின் நடக்கும். பொறுமையுடன் இருங்கள். வீண் வாதங்கள் வந்தால் விலகிச்செல்லுங்கள்.
(8 / 10)
கன்னி:கடக ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி, கன்னி ராசியினருக்கு நிதிப் பிரச்னையை உண்டுசெய்யலாம். இந்த காலத்தில் செய்யும் முதலீடுகள் லாபமாக இருக்காது.
(9 / 10)
துலாம்: கடக ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி, துலாம் ராசியினருக்கு வியாபாரத்தில் கவனக்குறைவை உண்டாக்கலாம். பணியிடத்தில் தேவையற்ற மன அழுத்தங்களை உண்டு செய்யலாம். திருமண வாழ்விலும் தேவையற்ற குழப்பங்கள் வந்துபோகலாம்.
(10 / 10)
பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்