தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெற இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க
- உங்கள் உடலுக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. ஒரு நல்ல இரவு ஓய்வுடன் கூடிய தூக்கம் மறுநாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க செய்கிறது. மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக ஆழ்ந்த தூக்கம் பலருக்கும் பெரும்பாடாக உள்ளது
- உங்கள் உடலுக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. ஒரு நல்ல இரவு ஓய்வுடன் கூடிய தூக்கம் மறுநாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க செய்கிறது. மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக ஆழ்ந்த தூக்கம் பலருக்கும் பெரும்பாடாக உள்ளது
(1 / 8)
பகலில் சோர்வாகவும், இரவு தூக்கமின்மையால விழித்து இருப்பது உடல் நலத்துக்கு மிகவும் கேடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலுக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது நடக்காத பட்சத்தில் மன அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கிறார்கள்
(2 / 8)
தூக்கமின்மை பிரச்னை பலரும் அவதிக்குள்ளாகும் பொதுவான விஷயமாக உள்ளது. இதனை ஸ்லீப் சிண்ட்ரோம் என்றும் அழைக்கிறார்கள். இரவில் தூக்கத்தை இழப்பது மற்றும் பிரச்னைகளை ஏதேனும் பற்றி சிந்தித்து தூக்கத்தை தொலைக்கிறார்கள். பிரச்னைகளில் இருந்து விடுபட சில நல்ல விஷயங்களை வாழ்க்கைமுறையில் சேர்த்துக் கொண்டால் சாதகமான பலன்கள் நிச்சயம் பெறலாம். நிம்மதியாகத் தூங்கத்தை பெறுவதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன இருக்கின்றன என்பதை பார்க்கலாம்(freepik)
(3 / 8)
தூங்குவது கடினமாக இருந்தாலோ, தூக்கம் வராமல் தவித்தாலே படுக்கையில் படுத்துக்கொண்டவாறே சில யோகா பயிற்சிகளை செய்யுங்கள். பிரமாரி, பிராணாயாமம் மற்றும் ஷவாசனம் போன்ற யோகா பயிற்சிகள் நல்ல தூக்கத்தை பெறுவதற்கு ஏற்றதாக உள்ளன. இவை உங்களுக்கு உடனடியாக நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவும்
(4 / 8)
நல்ல தூக்கத்தை பெறுவதற்கு அக்குபிரஷர் சிகிச்சையின் உதவியை நாடலாம். ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கான பல சிறப்பு புள்ளிகள் நம் உடலில் உள்ளன. உங்கள் கட்டை விரலை, உங்கள் முன்கைகளுக்கு இடையில் 30 வினாடிகள் அந்த புள்ளிகளில் வைத்து பின்னர் மூச்சை வெளியே விடவும். இதே செயல்முறையை 4 முதல் 5 முறை செய்யலாம்
(5 / 8)
தூக்கம் வராமல் தவித்தால், நீங்கள் நேராக படுத்து, உங்கள் இமைகளை விரைவாக சிமிட்டவும். இதனால் உங்கள் கண்கள் சோர்வடையும், விரைவில் தூங்கத்தை பெறுவீர்கள்
(6 / 8)
உங்களது அன்றைய முழு நாளின் நிகழ்வுகளை தலைகீழ் வரிசையில் நினைவுபடுத்துங்கள். அவ்வாறு செய்வது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்க உதவும்
(7 / 8)
உங்கள் அருகில் கடிகாரத்தை வைத்திருக்காதீர்கள், நீங்கள் தூங்கும் போது அது உங்களை அச்சுறுத்தலாம். அத்துடன் அவற்றின் மெல்லிய ஒலி தூக்கத்தை வரவழைப்பதில் தடையாக இருக்கலாம்
மற்ற கேலரிக்கள்