மன அழுத்தம் குறைவது முதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது வரை.. சிரிப்பதால் உண்டாகும் 6 அற்புத நன்மைகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மன அழுத்தம் குறைவது முதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது வரை.. சிரிப்பதால் உண்டாகும் 6 அற்புத நன்மைகள் இதோ..!

மன அழுத்தம் குறைவது முதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது வரை.. சிரிப்பதால் உண்டாகும் 6 அற்புத நன்மைகள் இதோ..!

Nov 06, 2024 09:30 PM IST Karthikeyan S
Nov 06, 2024 09:30 PM , IST

  • "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்பது பழமொழி. சரி, இப்போது வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

மன அழுத்தம் குறையும்: மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்க சிரிப்பு உதவுகிறது.சிரிக்கும்போது மூளையில் சிறிய அளவில் நியூரோபெப்பட்கள் எனும் ரசாயனங்கள் வெளியாகும். இது நரம்பியல் மண்டலத்தில் டோபைமைன், எண்டோர்பின் மற்றும் அதீத சிந்தனையில் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம், மன உளைச்சலில் இருந்து மீள முடியும்.

(1 / 6)

மனம் புத்துணர்ச்சி பெறும்: சிரிக்கும்போது இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், ரத்த அழுத்தம் குறைந்து உடலும், மனமும் புத்துணர்வு பெறும்.

(2 / 6)

ஹார்மோன்கள் சுரக்கும்: சிரிப்பு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். மனம்விட்டு சிரிக்கும்போது வலியைக் குறைக்கும். ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்.

(3 / 6)

கலோரிகளை எரிக்கிறது: ஒரு நாளுக்கு 15 நிமிடங்கள் சிரிப்பது 40 கலோரிகளை எரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(4 / 6)

தேற்றத்தை மெருகேற்றும்: சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கம் மேம்படும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் ஏற்படுவதுடன், தசை நார்கள் விரிவடைந்து முகத்தின் தோற்றத்தையும் மெருகேற்றும்.

(5 / 6)

நோய் எதிர்ப்பு சக்தி: சிரிப்பு உடல் மற்றும் மனதில் ஏற்படும் வலிகளைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்துடன் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்