Sivan Luck: சிவனுக்கான மாதம்.. சங்கு, துளசி, மஞ்சள் வழிபாடு வேண்டவே வேண்டாம்.. - ஆகஸ்டில் சிவனுக்கு செய்யக்கூடாதவை!
Sivan Luck: சிவலிங்கத்திற்கு குங்குமம் கொடுக்கக் கூடாது. காரணம், சிவன் படைப்பை அழிப்பவர் என்றும் அறியப்படுகிறார். - ஆகஸ்டில் சிவனுக்கு செய்யக்கூடாதவை!
(1 / 6)
சிவனுக்கான மாதத்தில் செய்யக்கூடாதவையாக பார்க்கப்படுபவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம். ஜுலை 29, ஆகஸ்ட் 5, 12, 19 ஆகிய தேதிகளில் வரும் திங்கள் கிழமைகளில், பகவான் சிவனுக்காக விரதம் இருந்து வழிபடுவது அற்புதமான பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். காரணம், இவையனைத்தும் சிவனுக்கான மாதத்தில் வருகிறது. சனாதன தர்மத்தில், சிவனுக்கான மாதம், மகத்தான மத முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. சிவ பக்தர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில், சிவனுக்காக விரதம் இருந்து வழிபட்டு, அவன் அருள் பெறுவதும், வழிமுறையாக இருக்கிறது. சில சிவ பக்தர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில், சிவபெருமான் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளையும் செய்வார்கள். இந்த ஆண்டு சிவன் மாதத்தில் அவனை வழிபட ஏற்றவாறாக 5 திங்கட்கிழமைகள் வருகின்றன.
(2 / 6)
அதன்படி, ஜூலை மாதத்தில் 2 திங்கள் கிழமைகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 3 திங்கள் கிழமைகளும் என மொத்தமாக 5 திங்கள் கிழமைகள் வருகின்றன. இந்த வழிபாடு நன்மை கொடுக்கும் என்றாலும், இந்த சிவன் மாதத்தில் அறியாமல் நாம் செய்யும் சில பிழைகள், நம்முடைய நிதி நிலைமையை தடுமாற செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று ஜோதிட நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். ஆகையால் சிவன் மாதத்தில் நீங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் எந்தெந்த காரியங்களை செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.
(3 / 6)
குங்குமம் கொடுக்காதீர்கள்சிவலிங்கத்திற்கு குங்குமம் கொடுக்கக் கூடாது. காரணம், சிவன் படைப்பை அழிப்பவர் என்றும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் பார்வதி தேவிக்கு விருப்பபடும் பொருட்களை வாங்கி கொடுத்து, உங்கள் வேண்டுதல்களை கேட்கலாம். இது உங்களை நீண்ட ஆயுளோடு வாழ வழி வகுக்கும்..
(4 / 6)
அதிக உணவு - அதிக மது வேண்டாம் சிவன் அதிகமாக மது உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். அதே போல, அதிகமான உணவை எடுத்துக்கொள்வதையும் தவிர்த்து விடுங்கள். இது சிவ பெருமானுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
(5 / 6)
மஞ்சள் கொடுக்க வேண்டாம் சிவன் மாதத்தில், சிவனை வழிபடும் போது மஞ்சளை பயன்படுத்தவே கூடாது. சிவலிங்கத்தின் மீது மஞ்சள் பிரசாதம் கொடுப்பது குற்ற உணர்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்