தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Siragadikka Aasai : சுதாரித்துக் கொண்ட மனோஜ்.. விஜயா என்டரியால் ஷாக் ஆன முத்து,மீனா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Siragadikka Aasai : சுதாரித்துக் கொண்ட மனோஜ்.. விஜயா என்டரியால் ஷாக் ஆன முத்து,மீனா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Jul 11, 2024 10:21 AM IST Divya Sekar
Jul 11, 2024 10:21 AM , IST

  • Siragadikka Aasai : விஜய் டிவியில் ஒலிபரப்பாகக்கூடிய சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றும் அந்த நகையை யார் மாற்றியது என்று முத்து மீனா இருவரும் தீவிரமாக கண்டுபிடிப்பதிலேயே இன்றைய எபிசோடும் நகர்கிறது. ஸ்ருதியை நகைக்கடை ஊழியராக பேச வைத்து மனோஜை உண்மையை சொல்ல வைக்கலாம் என பேசுகிறார். ஆனால் அவர் சுதாரித்துக் கொண்டு நான் எந்த நகையும் வாங்கவில்லை. ஸ்கேம் கால் செய்கிறீர்களா நான் போலீசில் புகார் கொடுப்பேன் என கூறி அந்த போன் காலை கட் செய்கிறார்.

(1 / 8)

இதனால் மீனா முத்து இருவரும் தான் செய்த பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என தெரிந்ததும் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார்கள். இதற்கிடையே ரவியோ இது பணம் சம்பந்தமான விஷயம் இதில் இவ்வாறு எதுவும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் பிரச்சனை வரும் என முத்துவிடம் கூறுகிறார். இதற்கு முத்து இது என்னுடைய மனைவியின் நகை கண்டிப்பாக யார் இப்படி செய்தார் என கண்டுபிடிப்பேன். மனோஜ் தான் இதனை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் அதனை நான் கண்டுபிடிப்பேன் எனக்கூறி மனோஜ் ரெஸ்டாரண்டை விட்டு முத்து, மீனா இருவரும் கிளம்புகிறார்கள்.

(2 / 8)

மனோஜ் உடனே வீட்டிற்கு சென்று விஜயாவிடம் தனக்கு வந்த கால் குறித்து சொல்கிறார். இதனை கேட்ட விஜயா ஷாக் ஆகி இது கண்டிப்பா முத்து வேலையா தான் இருக்கும் என சொல்கிறார். பின்னர் மனோஜிடம் சீக்கிரம் பணத்தை ரெடி பண்ணு நகையை மாற்றி வைத்துவிடலாம் என சொல்கிறார். நானும் அதற்கு தான் அம்மா ட்ரை பண்ணிட்டு இருக்கேன் கடையில் சரியா வியாபாரம் இல்லை என சொல்கிறார்.

(3 / 8)

பின்னர் முத்துவுக்கு இன்னொரு யோசனை வருகிறது. அதாவது விஜயாவுக்கு மிகவும் க்ளோஸ் ஃப்ரண்டான பார்வதி அத்தையை நேரில் சந்தித்து பேசினால் உண்மை வெளிவரும் என முத்து நினைக்கிறார். இதனை மீனா விடம் கூறி பார்வதி அத்தை வீட்டிற்கு வந்துவிடு அவரிடம் பேசினால் கண்டிப்பாக நமக்கு உண்மை தெரியவரும். அம்மா அனைத்தையும் அவரிடம் சொல்வார். இருவரும் அவ்வளவு நெருங்கிய நண்பர்கள் எனக் கூறி மீனாவை அங்கு வரவழைக்கிறார்.

(4 / 8)

இருவரும் பார்வதி அத்தை வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு பார்வதியை சந்தித்து பேசும் போது நகை சம்பந்தமாக முத்து கேட்கிறார். அதற்கு பார்வதி உளறுகிறார். நகை கவரிங் நகை தானே என பார்வதி சொல்ல இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க இது விஜயா என்னிடம் சொல்லி உள்ளார் என பேசி மழுப்புகிறார். பின்னர் முத்துவும் மீனாவும் நீங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை எனது சொந்த அத்தையாக தான் பார்க்கிறேன் என கூறி முத்து அவரிடம் உண்மையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்கிறார்.

(5 / 8)

மீனாவும் எனது அம்மா மீது பழியை போடுகிறார்கள். நான் இந்த நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என மீனாவும் கேட்கிறார். பார்வதி மனதுக்குள் இவர்கள் என்னிடம் போட்டு வாங்க வந்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது தான் இருவரும் பார்வதி அத்தையை பேசி யார் என சொல்ல வைக்கிறார். பார்வதியும் விஜயா மனோஜ் என சொல்லும் போதே விஜயா என்டரி கொடுக்கிறார்.

(6 / 8)

விஜயா பார்வதி என கத்தி பார்வதி சொல்வதை நிறுத்தி விடுகிறார். பின்னர் என்ட்ரி கொடுத்த விஜயா உங்களுக்கு இங்கே என்ன வேலை. இங்கே எதற்கு வந்தீர்கள் என கேட்க முத்துவோ அதை எதற்கு உங்களுக்கு என கூற அதற்கு மீனா நாங்கள் பழங்கள் கொடுக்க வந்தோம் எனக்கூறி முத்துவை அங்கிருந்து அழைத்து செல்கிறார்.

(7 / 8)

அப்போது முத்துவின் நண்பன் செல்வம் போன் செய்கிறார். அதனை எடுக்காமல் முத்து அழைக்கழிக்கிறார். ஆனால் மீனா நீங்கள் எடுத்துப் பேசுங்கள் எனக் கூற செல்வம் வீட்டிற்கு மிகக் குறைந்த விலையில் பிரிட்ஜ் கிடைக்கிறது. நீ என் கூட வந்தாய் என்றால் போய் வாங்கிவிடலாம் என கூறி அவரை அழைக்கிறார். அதற்கு முத்து நான் வரவில்லை எனக் கூற மீனா சமாதானப்படுத்தி நீங்கள் சென்று அவருக்கு வாங்கி கொடுங்கள் என கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்