Mercury: புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டிய ராசிகள்-signs to be very careful due to mercurys declination - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mercury: புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டிய ராசிகள்

Mercury: புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டிய ராசிகள்

Apr 15, 2024 03:58 PM IST Marimuthu M
Apr 15, 2024 03:58 PM , IST

  • Mercury: புதன் பகவானால் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இதனால் சில ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகி உள்ளது. இதனால் சில ராசிகள் பாதகமான சூழ்நிலைகளை அனுபவிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது இந்த புதன் பெயர்ச்சியால் தரித்திர யோகத்தில் சித்திக்கொண்ட ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 6)

மேஷம்: மீன ராசி, மேஷ ராசிக்கு விரய ஸ்தானம் ஆகும். அங்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி ஆவது பிரச்னைகளை அதிகரிக்கலாம். பணியிடத்தில் உங்களது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. உங்கள் அருகில் இருப்பவர்கள், பெயரைத் தட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள். புதிய வேலை தேடினாலும் கடும் இழுபறியான சூழல் உண்டாகும். தொழில் செய்யும் தொழில் முனைவோருக்கு போட்டிக் கடைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இக்காலத்தில் இல்லாவிட்டால், கொடுத்த பணம் திரும்பிவராது. பிறர் மத்தியில் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

(2 / 6)

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு, புதனின் வக்ர நிலை அசுப பலன்களைத் தருகிறது. தயவு செய்து வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தேவையில்லாத பதற்றம் இக்காலத்தில் உண்டாகும். நிதானமாக இல்லாவிட்டால், பணத்தைக் கூட இழப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு சுணக்கமான சூழல் நிலவும். காதலை இந்த நேரத்தில் சொன்னால் தோல்வியில் முடியும். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்கள்,சிறிது காலம் அந்த வேலையைத் தள்ளிப்போடுங்கள்.

(3 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, புதன் பகவானின் வக்ர நிலையில் இக்கட்டான சூழல்களே உண்டாகும். தேவையற்ற மனச்சோர்வில் சிக்கித் தவிப்பீர்கள். யாரிடமும் நல்லபிள்ளை என்ற பெயர் வாங்க முடியாது. பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் டார்ச்சர் அதிகரிக்கும். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, நீங்கள் கையில் இருக்கும் வாய்ப்பு, வசதியின் முக்கியத்துவத்தை உணராமல், ஒன்றை இழந்தபின் வருத்தப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களைப் போட்டு கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், மனப்பதற்றம் உண்டாகும். விரயச் செலவுகள் கூடும்.

(4 / 6)

மீன ராசி: இந்த ராசியினருக்கு, புதன் பகவானின் வக்ர நிலையில் பிரச்னை அவ்வளவு அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் டல்லாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவதில் இழுபறி நீடிக்கலாம். வாடிக்கையாளர் வசம் இடமிருந்து பணத்தைப் பெறுவதில் தாமதம் நிகழலாம். வீண் அலைச்சல் உண்டாகும். வீட்டில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்துபோகும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்