Mercury Venus Transits: புதன் - சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அடித்த பம்பர் அதிர்ஷ்டம்!
Mercury Venus Transits: இரண்டு பெரிய கிரகங்களின் இணைவால் நல்ல மாற்றங்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
(1 / 6)
கிரக மாற்றங்களின் அடிப்படையில் மார்ச் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் 7 மிகவும் முக்கியமானது. அன்று காலை 9:21 மணிக்கு புதன் பகவான், மீன ராசியில் சஞ்சரித்தபோது, முதல் பெயர்ச்சி நடந்தது. அதே நேரத்தில் சுக்கிரன் இன்று காலை 10:33 மணிக்கு கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு பலன்கிடைக்கப்போகிறது.
(2 / 6)
ரிஷபம்: புதன் பகவான் ரிஷபராசியின் 11ஆவது வீட்டிலும், சுக்கிர பகவான் 10ஆவது வீட்டிலும் நுழைகிறார். இரண்டுமே உங்களது பணி மற்றும் தொழிலைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்தவை. இந்த காலகட்டத்தில் பணிகள் பாராட்டப்படும். பதவி உயர்வு பெறலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட இல்வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கை ஆகியவை மேம்படும்.(Freepik)
(3 / 6)
கடகம்: புதன் ஒன்பதாம் வீட்டிலும், சுக்கிரன் எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நேரம் சாதகமாக இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் பாராட்டப்படும். இந்தப் பெயர்ச்சி எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் தரும்.
(4 / 6)
விருச்சிகம்: புதன் பகவான் 5ஆம் வீட்டிலும், சுக்கிர பகவான் 4ஆம் வீட்டிலும் நகர்கின்றனர். புதன் மற்றும் சுக்கிரப்பெயர்ச்சியின் தாக்கம் தொழில் வாழ்க்கையில் நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கவேண்டாம். செல்வம் சேர்ப்பதில் வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையுடன் சுமூகமான நேரத்தை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.(Freepik)
(5 / 6)
தனுசு: தனுசு ராசிக்கு புதன் நான்காவது வீட்டிலும், சுக்கிர பகவான் மூன்றாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். தொழிலில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்கும். வேலையில் சாதகமான மாற்றம் ஏற்படும். நெட்வொர்க்கிங் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். இல்லற வாழ்வில் இருந்த பிரச்னைகள் இந்த நேரத்தில் தீர்க்கப்பட்டு சரியாகும்.(Freepik)
(6 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்