டயபிடிஸ் இருப்பவர்கள் இனிப்பு பலகாரங்களை சாப்பிடனுமா? இதை மட்டும் செய்யுங்கள்
- இனிப்பு பலகாரங்களை விரும்பாதவர் யார்தான் இருக்கிறார். ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த இனிப்பு என்பது எமனாக உள்ளது. அவர்களும் இனிப்பு பலகாரங்களை சாப்பிடும் விதமாக அவற்றை எப்படி தயார் செய்வதென்பது பற்றி பார்க்கலாம்.
- இனிப்பு பலகாரங்களை விரும்பாதவர் யார்தான் இருக்கிறார். ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த இனிப்பு என்பது எமனாக உள்ளது. அவர்களும் இனிப்பு பலகாரங்களை சாப்பிடும் விதமாக அவற்றை எப்படி தயார் செய்வதென்பது பற்றி பார்க்கலாம்.
(1 / 8)
இனிப்புகளை சாப்பிடுவதற்கு பண்டிகை காலம் அல்லது வேறு எதுவும் விசேஷ நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. விரும்பிய நேர்த்தில் விரும்பியவாறு நண்பர்கள், உறவினர்கள் என அனைவருடன் சாப்பிடும் பதார்த்தமாக இனிப்பு வகைகள் இருந்து வருகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தும் இனிப்பு பலகாரங்களை அதிகமாக எடுத்துக்கொண்டால் பின்னர் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோயை உருவாக்கி மகிழ்ச்சியை இழக்க வைக்கும். சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடும் விதமாக அவற்றை தயார் செய்யும் டிப்ஸ்கள் சிலவற்றை பார்க்கலாம்.(HT File photo)
(2 / 8)
நீங்கள் தயார் செய்யும் இனிப்பு வகைகளில் ஊட்டச்சத்து மற்றும் நார்சத்துகளை அதிகரிக்க மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவு, இதர தினை மாவுகளை பயன்படுத்துங்கள்.(Pinterest)
(3 / 8)
ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள், பாதம், வால்நட், எள் விதைகள் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது, இதயத்துக்கு உகந்தவாறு நல்ல கொழுப்பை சேர்ப்பதற்கு உதவும்(Pinterest)
(4 / 8)
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பயன்பாட்டை குறைத்து அவற்றுக்கு பதிலாக பழ கூழ்கள், தேதிகள், அத்திப்பழங்கள், தேன் மற்றும் திராட்சைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆரஞ்சு ஓட்ஸ் ரப்டி, ஆப்பிள் அப்பம், ஆப்பிள் கீர், பேரிச்சை மற்றும் கொட்டைகளுடன் கூடிய ரோல், அத்திப்பழம் ரோல், ராகி லட்டு, கடலைமாவு லட்டு போன்ற ஆரோக்கியமான பதார்த்தங்களை சாப்பிடலாம். இவற்றில் சர்க்கரைக்கு பதிலாக உலர் பழங்கள், மசாலா பொருள்களை சேர்த்து கொள்ளலாம்.(pinterest)
(5 / 8)
நீங்கள் தயார் செய்யும் டெஸ்ஸர்ட்களில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் இனிப்பு சுவையானது மேலும் அதிகரிக்கிறது.(Shutterstock)
(6 / 8)
பேக்கரிகளில் இருந்து கூக்கீஸ் போன்றவற்றை வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே அவற்றை தயார் செய்து கொள்ளலாம். இதன் மூலம் சர்க்கரை அளவை விரும்பியவாறு சேர்த்துக்கொள்வதோடு, எண்ணெய், டால்டா, வனஸ்பதி போன்றவற்றை பயன்பாடும் தவிர்க்கப்படும். இதனால் இதய நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.(Pinterest)
(7 / 8)
சாக்லேட்களை விரும்பி சாப்பிடுவோர், பால் கலந்த சாக்லேட்களுக்கு பதிலாக டார்க் சாக்லேட்களை சாப்பிடலாம். இதில் குறைவான அளவே சர்க்கரை நிறைந்துள்ளது.(Unsplash (Merve Aydın))
மற்ற கேலரிக்கள்