ED வழக்கில் நாளை குற்றாச்சாட்டு பதிவு! மருத்துவமனையில் படுத்த செந்தில் பாலாஜி! ஒத்திவைக்க கோரி புதிய மனு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ed வழக்கில் நாளை குற்றாச்சாட்டு பதிவு! மருத்துவமனையில் படுத்த செந்தில் பாலாஜி! ஒத்திவைக்க கோரி புதிய மனு!

ED வழக்கில் நாளை குற்றாச்சாட்டு பதிவு! மருத்துவமனையில் படுத்த செந்தில் பாலாஜி! ஒத்திவைக்க கோரி புதிய மனு!

Jul 21, 2024 09:05 PM IST Kathiravan V
Jul 21, 2024 09:05 PM , IST

  • அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்கில் நாளை குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார். 

(1 / 7)

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார். 

அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்கில் நாளை குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

(2 / 7)

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில், அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி உள்ளார்.

(3 / 7)

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளார். அதில், அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி உள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறி உள்ளார்.

(4 / 7)

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறி உள்ளார்.(ANI)

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது.

(5 / 7)

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

(6 / 7)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

(7 / 7)

கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.(HT_PRINT (PTI))

மற்ற கேலரிக்கள்