Dhanush: நடிகர் தனுஷுடன் பணியாற்றிய பின் விவாகரத்து பெற்ற திரைப்பிரபலங்கள் - பட்டியல் உள்ளே
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dhanush: நடிகர் தனுஷுடன் பணியாற்றிய பின் விவாகரத்து பெற்ற திரைப்பிரபலங்கள் - பட்டியல் உள்ளே

Dhanush: நடிகர் தனுஷுடன் பணியாற்றிய பின் விவாகரத்து பெற்ற திரைப்பிரபலங்கள் - பட்டியல் உள்ளே

May 15, 2024 09:41 PM IST Marimuthu M
May 15, 2024 09:41 PM , IST

  • Dhanush:நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தினை காதலித்து திருமணம் செய்தாலும், சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் 2004ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா,லிங்கா ஆகிய மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷூடன் பணியாற்றிய சில பிரபலங்களும் விவாகரத்து பெற்றும், தாம்பத்திய உறவில் இருந்து பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

(1 / 6)

நடிகை அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2 படங்களிலும், தனுஷின் தயாரிப்பில் அம்மா கணக்கு படத்திலும் நடிகை அமலா பால் நடித்தார். அதன்பின், 2017ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய்யும் - அமலா பாலும் விவாகரத்து பெற்றனர். 

(2 / 6)

பிரபல டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, தனது நெடுநாள் நண்பரான உதவி இயக்குநர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பின், தனுஷ் நடித்து, இயக்கி, தயாரித்த ’பவர் பாண்டி’ திரைப்படத்தில், நடித்தபின், திவ்யதர்ஷினி தன் மணவாழ்க்கையில் இருந்து விலகினார். 

(3 / 6)

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் பள்ளியில் இருந்து காதலித்து, 2013ஆம் ஆண்டு கல்யாணம் செய்துகொண்டனர். ஜி.வி.பிரகாஷ், நடிகர் தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகியப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், அவரது தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை, விசாரணை ஆகியப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் சைந்தவியுடனான தனது திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

(4 / 6)

’யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நண்பனாக நடித்தவர், கார்த்திக் குமார். நிறையப் படங்களில் சின்னஞ்சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரும் பின்னணிப் பாடகியுமான சுசித்ராவும் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, 2017ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். 

(5 / 6)

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 5 ஆண்டுகளாக காதலித்து, 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இவரது மணவாழ்க்கை 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தனுஷுடன் சமந்தா, தங்கமகன் திரைப்படத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்