Sreeja Senthil: ‘எத்தன முறையோ பாசிட்டிவ்ன்னு வந்து.. கரு தங்காம போனப்ப உடைஞ்சே போயிட்டேன்..’ - ஸ்ரீஜா பேட்டி
Sreeja Senthil: நான் எல்லோரிடமும் சொல்வது அதுதான். பாசிட்டிவாக இருங்கள். பாசிட்டிவாக நீங்கள் ஒரு விஷயத்தை அணுகினீர்கள் என்றால், அது நிச்சயமாக பாசிட்டிவாக தான் நடக்கும். - ஸ்ரீஜா பேட்டி
(1 / 6)
Sreeja senthil: ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்கள் ஸ்ரீஜா, செந்தில் ஜோடி.இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர்கள். இது விஜய் டிவி வரலாற்றில் வெற்றிகரமான சீரியலாக மாறியது. இன்றும் பலரும் இந்த சிரீயலின் பாடலை ரசித்து கேட்டு வருகின்றனர்.
(2 / 6)
10ம் ஆண்டில் காலடி வைத்த ஜோடிஅந்த சீரியலில் நடித்து கொண்டே இருந்த போது செந்தில், ஸ்ரீஜா இடையே காதல் மலர்ந்த நிலையில், அவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு தேவ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் அண்மையில் தங்களுடைய 10 ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக, கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஸ்ரீஜா, நீண்ட வருடங்களுக்கு பிறகு பிறந்த தன்னுடைய குழந்தை தேவ் குறித்து பேசினார். இது குறித்து அவர் பேசும் போது, “இப்போது தாய்மையை நான் மிகவும் சந்தோஷமாக கழித்து வருகிறேன். முன்பை விட தற்போது என்னுடைய எமோஷனை கட்டுப்படுத்தும் திறன் அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன். குழந்தை சில சமயங்களில் சில குறும்புகளை செய்யும் பொழுது, கோபம் தலைக்கு ஏறும். ஆனால், அதை அவர்களிடம் காண்பிக்க முடியாது.
(3 / 6)
அந்த உணர்வு புரிகிறது.அப்படி இருந்து, இருந்து எமோஷனை கட்டுப்படுத்தும் திறன் எனக்கு வந்து விட்டதாக நினைக்கிறேன். என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். உனக்கு ஒரு குழந்தை பிறந்தால்தான் அதனுடைய உணர்வு புரியும் என்று.. அவர் சொன்னபடியே தற்போது எனக்கு அந்த உணர்வு புரிகிறது. அது என்னுடைய குழந்தை மட்டுமல்ல, பிற குழந்தைகளை பார்க்கும் பொழுது கூட என்னால் தாய்மையை உணர முடிகிறது.
(4 / 6)
எனக்கு நிறைய முறை பாசிட்டிவ் என வந்திருக்கிறது. எத்தனை முறை என்பது உண்மையில் எனக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் கரு தங்காமல் சென்று விடும். நான் எப்பொழுதுமே எனக்கு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டது கிடையாது. காரணம் நிச்சயம் வரும் காலத்தில் குழந்தையானது உருவாகும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது அந்த விஷயத்தை பாசிட்டிவாக அணுகினேன்.
(5 / 6)
பாசிட்டிவாக இருங்கள்.நான் எல்லோரிடமும் சொல்வது அதுதான். பாசிட்டிவாக இருங்கள். பாசிட்டிவாக நீங்கள் ஒரு விஷயத்தை அணுகினீர்கள் என்றால், அது நிச்சயமாக பாசிட்டிவாக தான் நடக்கும். ஆகையால் நாம் தேவையில்லாமல் நமக்கு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்க தேவையில்லை. தற்போது இருக்கக்கூடிய நேரத்தை முடிந்த அளவு சந்தோஷமாக கழியுங்கள் மற்றவை நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.
(6 / 6)
முதல் முறை நான் கருவுற்று, அது கருச்சிதைவுக்கு உள்ளான பொழுது, ரொம்பவும் உடைந்து விட்டேன். எமோஷனலாக படுவிக்காக மாறிவிட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எங்களுக்கு மருத்துவ ரீதியாக எந்த பிரச்சினையுமே இல்லை. அது எதனால் இப்படி நடக்கிறது என்று தெரியாமல் இருந்தது. நமக்கு ஏன் அப்படி நடக்கவில்லை என்ற கேள்வியின் அழுத்தம், அதிகமாகவே இருக்கும். ஆனால் அதை எல்லாம் பாசிட்டிவாக இருந்துதான் நான் கடந்து வந்திருக்கிறேன்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்