Chaya Sarathkumar: ‘நல்லா யோசிச்சு முடிவு எடுங்க.. விவாகரத்து ரொம்ப வலிக்கும்..’ - சரத்குமார் முன்னாள் மனைவி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chaya Sarathkumar: ‘நல்லா யோசிச்சு முடிவு எடுங்க.. விவாகரத்து ரொம்ப வலிக்கும்..’ - சரத்குமார் முன்னாள் மனைவி!

Chaya Sarathkumar: ‘நல்லா யோசிச்சு முடிவு எடுங்க.. விவாகரத்து ரொம்ப வலிக்கும்..’ - சரத்குமார் முன்னாள் மனைவி!

Feb 22, 2024 09:44 AM IST Kalyani Pandiyan S
Feb 22, 2024 09:44 AM , IST

“திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் சொல்வதற்கில்லை. உண்மையில் திருமணம் செய்து கொள்வதற்கு முதலில் நாம் மனதளவில் தயாராக வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.”

சரத்குமார் மனைவி சாயா சரத்குமார்!

(1 / 6)

சரத்குமார் மனைவி சாயா சரத்குமார்!

சரத்குமாரின் முன்னாள் மனைவியான சாயா சரத்குமார் விவாகரத்து குறித்து கடந்த ஆண்டு அவள் கிளிட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டி இங்கே!  

(2 / 6)

அவர் பேசும் போது, “திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் சொல்வதற்கில்லை. உண்மையில் திருமணம் செய்து கொள்வதற்கு முதலில் நாம் மனதளவில் தயாராக வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.   

(3 / 6)

நீங்கள் திருமணம் செய்து கொள்வது சரியான காரணங்களுக்காக இருக்க வேண்டும். எமோஷனலாகவும், மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் தேர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.  திருமணம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. கல்யாணம் என்பது ஒரு பயணம். பயணத்தில் நீங்கள் சரிவர பயணம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் தேர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். இங்கு சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.    

(4 / 6)

ஆனால் அது திருமணம் கிடையாது. உடல் தேவை என்பது திருமணத்தில் மிக மிக சிறிய பங்கு தான். ஆனால் அதையும் தாண்டி நீங்கள் மனதளவில் திருமணத்திற்கு தயாராக வேண்டும்.நீங்கள் திருமணத்தை சரியான காரணங்களுக்காக செய்யும்பொழுது, அந்தப் பயணம் என்பது பெரிதளவு இடையூறு இல்லாமல் செல்லும். ஆனால் நீங்கள் தவறான காரணங்களுக்காக செய்யும்பொழுது, அது முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன   

(5 / 6)

  மனதளவில், உடலளவில், சமூக அளவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.குழந்தைகள் இருப்பின் அந்த நிலைமை இன்னும் மோசமாக மாறும். ஆகையால் விவாகரத்து முடிவை எடுக்கும் முன்பு நன்றாக யோசியுங்கள்.பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது மிக மிக முக்கியம்.  அவர்கள் எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலைகளில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களோடு அது இருக்க வேண்டும் எப்போது நீங்கள் அதிகமாக கொடுக்க தயாராக இருக்கிறீர்களோ அப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களது பார்ட்னரிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால், நீங்கள் சந்தோஷமாக வாழ முடியாது. இல்லை என்றால் நீங்கள் தனியாக மகிழ்ச்சியாக வாழ்வதே நல்லது” என்று பேசினார்.  

(6 / 6)

மற்ற கேலரிக்கள்