Sani Peyarchi Palangal 2025: மகரத்தை விட்டு விலகும் ஏழரை சனி! அடிக்க போகுது அதிர்ஷ்டம்! பிடிக்க ரெடியா?-sani peyarchi palangal 2025 magaram rasi gets a boost in love career and finance - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Peyarchi Palangal 2025: மகரத்தை விட்டு விலகும் ஏழரை சனி! அடிக்க போகுது அதிர்ஷ்டம்! பிடிக்க ரெடியா?

Sani Peyarchi Palangal 2025: மகரத்தை விட்டு விலகும் ஏழரை சனி! அடிக்க போகுது அதிர்ஷ்டம்! பிடிக்க ரெடியா?

Sep 28, 2024 06:09 PM IST Kathiravan V
Sep 28, 2024 06:09 PM , IST

  • Sani Peyarchi Palangal 2025: ஆனால் 2025ஆம் ஆண்டு நிகழப்போகும் சனி பெயர்ச்சிக்கு பிறகு நீடித்து வந்த தங்கள்கள், சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் ஏற்படும். உத்யோகத்தில் மன நிம்மதி ஏற்படும். தடைப்பட்டு இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு முறையாக கிடைக்கும்.

அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது. கும்பம் ராசிக்கு பாத சனியும், மீனம் ராசிக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கு விரைய சனியும் தொடங்க உள்ளது.

(1 / 7)

கடந்த 7 ஆண்டுகளாக பலவித கஷ்டங்களையும், சங்கடங்களையும், தடங்கல்களையும், குடும்ப பிரச்னைகளையும் மகரம் ராசிக்காரர்கள் அனுபவித்து வந்தார்கள். 

(2 / 7)

படிக்கும் பருவத்தில் இருந்த மகரம் ராசிக்காரர்களுக்கு படிப்பில் மந்த தன்மை மற்றும் உயர்க்கல்வியை தடைகளை சனி பகவான் கொடுத்து இருப்பார். 20 வயது முதல் 40 வயதுகளில் உள்ளவர்களுக்கு வேலையில் சிக்கல், வேலை கிடைக்காமல், தொழிலில் மந்தம் உள்ளிட்ட சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள். 

(3 / 7)

ஆனால் 2025ஆம் ஆண்டு நிகழப்போகும் சனி பெயர்ச்சிக்கு பிறகு நீடித்து வந்த தங்கள்கள், சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் ஏற்படும். உத்யோகத்தில் மன நிம்மதி ஏற்படும். தடைப்பட்டு இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு முறையாக கிடைக்கும். 

(4 / 7)

குடும்பம், தனம், திருமணம் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள். திருமணத் தடைகள் நீங்கும். கணவன் - மனைவி இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் தீரும்.  

(5 / 7)

ராசிக்கு மூன்றாம் இடமான மீனம் ராசிக்கு சனி பகவான் செல்கிறார். மகரம் ராசிக்கு உபஜெய ஸ்தானம் ஆக மீனம் ராசி உள்ளது. 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்கள் வெற்றிக்கு துணை புரியக் கூடிய ஸ்தானம் ஆகும். 

(6 / 7)

மூன்றாம் இடத்தில் கிரகங்கள் இருந்தால் வாழ்கையின் வெற்றிக்கு அந்த கிரகம் துணை புரியும். வாழ்கையில் சந்தித்து வந்த சிக்கல்களும், பிரச்னைகளும் தீரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தாம்பத்திய வாழ்கையில் இருந்த சிக்கல்கள் தீரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். போக்குவரத்து சார்ந்த தொழில்கள் லாபம் தரும். சொத்து, வேலை உள்ளிட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும்போது கவனம் தேவை. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்