பெருகும் விவாகரத்து.. கணவனுடைய பார்வையை மனைவியும் மனைவியின் பார்வையை கணவனும் நம்பணும்.. பிரபஞ்ச நியதி இது: சமுத்திரக்கனி
- பெருகும் விவாகரத்து.. கணவனுடைய பார்வையை மனைவியும் மனைவியின் பார்வையை கணவனும் நம்பணும்.. பிரபஞ்ச நியதி இது: சமுத்திரக்கனி
- பெருகும் விவாகரத்து.. கணவனுடைய பார்வையை மனைவியும் மனைவியின் பார்வையை கணவனும் நம்பணும்.. பிரபஞ்ச நியதி இது: சமுத்திரக்கனி
(1 / 6)
திருப்பூரில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சமுத்திரக்கனி மேடையில் பேசுகையில், ’’ஒருவரை ஒருவர் நம்பணும். நம்பும்போதுதான் பயணம் அழகாக இருக்கும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் கடனைத்தீர்ப்பதற்காகத்தான் இந்த பூமிக்கு வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன். அந்த ஆத்மாவுக்கு நேர் எதிராக இருப்பவர்களைத்தான் இந்த பிரபஞ்சம் வந்து ஒன்று சேர்க்கும்''.
(2 / 6)
‘’நான் சொல்வதை என் பொண்டாட்டி கேட்கவேமாட்டேன்கிறான்னு சொல்வாங்க. நாம் ஒன்று சொன்னால், அப்படியே வேற சொல்றான்னு சொல்வாங்க. இங்கேயும் அதே பிரச்னை தான். நான் ஒன்று சொன்னால், இங்கேயும் வேறு சொல்றார்னு மனைவி சொல்வாங்க. வேறுதான் சொல்வாங்க. அதுதான் சேரும். நான் பார்ப்பது கறுப்பாக இருந்தால், என் மனைவி பார்ப்பது சிவப்பு ஆக இருக்கும்''.
(3 / 6)
‘’அவர்கள் பார்ப்பது எனக்குத் தெரியாது. நான் கறுப்பாக ஒன்றைப் பார்த்தால் அவர்களுக்குத் தெரியாது. அதை அவங்க நம்பணும். அதுதான், இந்தப் பயணம். இதை அந்த இரண்டு ஆத்மாவும் முடிச்சிட்டு சந்தோஷமாக மேலே கிளம்பி போகணும். இதுதான் வாழ்க்கையின் வட்டம் என்று நான் பார்க்கிறேன்.நிறையபேர் என்னிடம் வந்து நான் நடிக்கணும்னு வந்தேன் சார். கவிதை, கதை எல்லாம் எழுதுவேன். ஃபேமிலியின் சுமைக்காக வேலை பார்த்தேன். 58 வயதில் ஓய்வுபெற்றபின் தான், எனக்கான நேரம் கிடைச்சதுன்னு சொல்வாங்க''
(4 / 6)
‘’ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழவே இல்லை. 58 வயதுக்குப் பின்புதான், இந்த ஆத்மா எதற்காக பூமிக்கு வந்ததோ, தன்னுடைய கனவுகளுக்காகவும் தன்னுடைய சந்தோஷத்தை நிறைவேற்றுவதற்காகவும் ஆசைப்படுகிறது.அப்போது கைகொடுக்குறோம் பார்த்தீங்களா. அதுதான் அந்த ஆத்மாவின் உண்மையான வாழ்க்கை. இப்படி எல்லோருக்குள்ளும் இருக்கு.''
(5 / 6)
‘’நிறையபெண்களைப் பார்த்திருக்கேன். ஆசையே நிறைய இருக்குன்னு சொல்வாங்க. பிறந்ததில் இருந்து அப்பா சொல்வதைத்தான் கேட்பேன். பிடிக்கலைன்னாகூட அப்பா சொல்வதைத்தான் கேட்பேன். திருமணம் கூட அப்பா சொன்னமாதிரிதான் கேட்டு பண்ணிக்கிட்டேன்.திருமணத்துக்குப் பின், கணவன் சொன்னதைக் கேட்டு நடந்தேன். அதற்குப் பிறகு, குழந்தைகள் பிறந்தாங்க. அடுத்து பிள்ளைகள் சொன்னதைக் கேட்டு நடந்தேன். இப்படி கேட்டுகேட்டு வாழ்ந்து என் வாழ்க்கையை நான் வாழவே இல்லை. இப்படி சொல்ற பெண்களை நிறைய பேரைப் பார்த்திருக்கேன்.''
(6 / 6)
‘’ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துட்டு, தன்னுடைய கடமைகளை எல்லாம் முடிச்சிட்டு மேலே போகணும். இதுதான் இந்த உலகத்தின் நியதி. அதற்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கு. அதை நோக்கி பயணப்படனும். யாரும் யாரையும் தட்டிவைக்கக் கூடாது. அது தான் நரை காலத்தில் பெருகும் விவாகரத்துகள். ஒரு அம்மா சொல்றாங்க, 55 வயசில் விவாகரத்து வாங்கப்போறேன்னு. என் புருஷனுக்கு சூடாக சமைத்துக் கொடுக்கணும். சுடச்சுட காபி போட்டுக்கொடுக்கணும். மதியம் சாப்பாடு, ஈவினிங் ஸ்நாக்ஸ், இரவு சமைக்கணும். இப்படி 35 வருஷமாக நான் இதே வேலையை தான் நான் செய்திட்டு இருக்கேன். என்னை விட்டுவிடுங்கள். எனக்குன்னு சின்ன சின்ன ஆசைகள் இருக்கு. அதை செய்துட்டு நான் செத்துடுறேன்னு சொல்றாங்க. இதில் யார் சரி, யார் தவறு. இது தான். 35 வருஷமாக அந்த பெண்ணை ஒரே வேலையை செய்யச் சொல்றோமேன்னு அந்த ஆத்மாவும் நினைக்கல. அது தான் அந்த பந்தம் உடைந்தது. எளிமையாக சொன்னால், ஒருத்தரை ஒருத்தர் நம்பணும் அவ்வளவு தான்’’ என நடிகர் சமுத்திரக்கனி தனது உரையை முடித்தார்.
மற்ற கேலரிக்கள்