Samsung Galaxy S24: இந்தியாவில் அறிமுகமான சாம்சங் எஸ்24 அல்ட்ரா AI தொழில்நுட்ப போன்கள்! அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி?
ஆப்பிள் ஐபோன் ஆதிக்கத்துக்கு பதிலடி தரும் விதமாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேம்படுத்தப்பட்டு AI செயல்பாடுகள், ஒரே நேரத்தில் பல மொழி பெயர்ப்பு, மற்றும் புதுமையான அம்சங்களால் நுகர்வோரை வசீகரித்துள்ளது.
(1 / 6)
சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ப்ரீமியர் ஸ்மார்ட் போனாக சாம்சங் கேலக்லி எஸ்24 சீரிஸ் உள்ளது. இந்த போன் ஜனவரி 17இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் ஆதிக்கத்துக்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த போனில் தொலைபேசி அழைப்புகளின் போது 13 மொழிகளில் நிகழ்நேர இருவழி குரல் மொழிபெயர்ப்பு உள்பட பல்வேறு மேம்பட்ட AI அம்சங்களை கொண்டுள்ளது
(2 / 6)
2023 ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மாடல்ளை மிஞ்சும் வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடல்கள் சாதனத்தில் AI செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. ஒரே நேரத்தில் மொழி மொழிபெயர்ப்பு போன்ற பணிகளுக்கு கிளவுட் இணைப்புகளை நம்பாமல் நிலையான பாதுகாப்பை வலியுறுத்தியுள்ளது
(3 / 6)
சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் புதுமையான AI திறன்களாக "circle-to-search" செயல்பாடு, tone சரிசெய்தல்களுடன் AI மொழிபெயர்ப்பு, AI summaries, பயனாளர் அனுபவத்தை மேம்படுத்த விதமாக புகைப்படங்களை உருவாக்கும் ஆப்ஷன்கள் இடம்பிடித்துள்ளன
(4 / 6)
Qualcomm மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு சாதனத்தில் AI தொழில்நுட்பம் மீது அதிக கவனம் செலுத்துகிறது. எனவே தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வதற்கு மிகவும் பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. ஏனெனில் இது செயலாக்கத்துக்கா கிளாவுட்ஸ்க்கு தரவுகளை அனுப்ப வேண்டிய தேவையை நீக்குகிறது
(5 / 6)
2024 ஆம் ஆண்டில் 5% ஸ்மார்ட்போன்கள் மட்டுமே AI- திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், வரும் 2027ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 45% ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் AI தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது
மற்ற கேலரிக்கள்