Magaram Rasipalan: குரு உடன் இணையும் சந்திரன்! மகரம் ராசிக்கு உண்டாகும் சாமர யோகம்! இனி எல்லாமே வெற்றிதான்!
- இந்த வார இறுதியில் சந்திர பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இடம்பெயர்கிறது. இதனால் சந்திரன் - குரு சேர்க்கை ஏற்படுகின்றது. இதனால் சாமர யோகத்தை மகரம் ராசிக்காரர்கள் அனுபவிப்பார்கள்.
- இந்த வார இறுதியில் சந்திர பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இடம்பெயர்கிறது. இதனால் சந்திரன் - குரு சேர்க்கை ஏற்படுகின்றது. இதனால் சாமர யோகத்தை மகரம் ராசிக்காரர்கள் அனுபவிப்பார்கள்.
(1 / 8)
புதிய வாரம் தொடங்கி உள்ள நிலையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரையிலான மகரம் ராசியினருக்கான பலன்களை தற்போது பார்க்கலாம்.
(2 / 8)
வக்ர கதியில் உள்ள சனி பகவான், மகரம் ராசிக்காரர்களுக்கு குன்றிய சிறப்புகளை சீர் செய்வதற்கான நேரமாக இது அமைந்து உள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்றிய நாளில் உங்கள் ராசியிலேயே சந்திரன் பயணிக்கிறார். இதனால் உங்கள் வாழ்கை துணை மூலம் நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் பணி புரிவர்களால் நன்மைகள் உண்டாகும்.
(4 / 8)
8ஆம் இடத்திலே சுக்கிரன் உடன் இணைந்து புதன் வக்ரம் பெற்று உள்ளார். மறைந்த புதன் மிகப்பெரிய அருளையும், ஆற்றலையும் உங்களுக்கு கொடுப்பார். இந்த வாரத்தில் உணவு பழக்கத்தில் மிக கவனமாக இருப்பது அவசியம். இதனால் சிலருக்கு உபாதைகள் ஏதேனும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
(5 / 8)
பொருளாதார நிலையை பொருத்தவரை உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தில் வக்ரம் பெற்று உள்ள சனி பகவான் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார். பணவரவுக்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணத்தை கையாளும் போது தெளிவான மன நிலை உடன் கையாண்டால் சிக்கல்கள் வராது.
(6 / 8)
2ஆம் இடமான வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் உள்ளதால் தேவையற்ற வார்த்தைகள் காரணமாக உடன் இருப்பவர்கள் வருத்தப்படும் நிலை உண்டாகும் என்பதால் பேச்சில் கவனம் தேவை.
(7 / 8)
இந்த வாரத்தில் சனி பகவான் உடன் சந்திரன் இணைவதால் பேச்சில் கவனம், மனக்குழப்பம் இன்றி இருப்பது, இறை அச்சத்துடன் இருப்பது, விடா முயற்சியுடன் இருப்பது மிக அவசியம் ஆகும்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் சந்திரன் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்தில் தொடங்கி ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் 3ஆம் பாதம் வரை பெயர்ச்சி ஆக உள்ளார்
(8 / 8)
இந்த காலகட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நெடுநாட்களாக தடைபட்டு இருந்த திருமணம் கைக்கூடும் நிலை உண்டாகும். வாழ்கை துணை மூலம் நன்மைகள் கிடைக்கும். உங்களின் உடன் பிறப்புகள் மற்றும் உங்களின் வாரிசுகள் மூலம் உங்களின் கனவுகள் நனவாகும். இந்த நேரத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு சில அலைச்சல்கள் இருந்தாலும் கூட தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பது மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுத் தரும். மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்