Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டது கோயில் நிர்வாகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டது கோயில் நிர்வாகம்!

Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டது கோயில் நிர்வாகம்!

Jul 15, 2024 11:38 AM IST Karthikeyan S
Jul 15, 2024 11:38 AM , IST

  • மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில் நடை இன்று (ஜூலை 15) மாலை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மகர மற்றும் மண்டல பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாக் காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். 

(1 / 6)

அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின் போதும் முதல் 5 நாள்கள் ஐயப்பன் கோயிலினஅ நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் கோயில் நடை  இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 

(2 / 6)

தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

(3 / 6)

நாளை முதல் வரும் 20ஆம் தேதி வரை 5 நாட்களும் காலை 5 மணி முதல் 10 மணி வரை சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

(4 / 6)

20ஆம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

(5 / 6)

பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்