தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ruturaj Gaikwad Record: தோனியின் 11 ஆண்டு கால சாதனை முறியடிப்பு! புதிய ரெக்கார்டு செய்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

Ruturaj Gaikwad Record: தோனியின் 11 ஆண்டு கால சாதனை முறியடிப்பு! புதிய ரெக்கார்டு செய்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

May 02, 2024 08:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 02, 2024 08:30 PM , IST

  • Ruturaj Gaikwad: சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் 11 ஆண்டு கால சாதனையை தற்போதையை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். ஒரே சீசனில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த கேப்டனாக சாதனை புரிந்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்

(1 / 5)

இந்த சீசனில் இதுவரை ருதுராஜ் கெய்க்வாட் 509 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் தோனியின் 11 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர் 2013 சீசனில் தோனி அடித்த 461 ரன்களே சிஎஸ்கேவுக்காக கேப்டன் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வந்தது

(2 / 5)

இந்த சீசனில் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வரும் ருதுராஜ் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 17 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட இதுவரை 2,244 ரன்கள் அடித்துள்ளார்

(3 / 5)

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். ஆனால் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது

(4 / 5)

மும்பை இந்தியன்ஸ்க்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வியை இந்த சீசனில் விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி நான்காவது இடத்தில் இருந்து வருகிறது

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்