என்னது இந்த 5 ரூபாய் நாணயம் இனி செல்லாதா? ரசிர்வ் வங்கி முக்கிய முடிவு.. முழு விவரம் இதோ
- இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்களாக ரூ. 1, ரூ. 2, ரூ.5, ரூ. 10, ரூ. 20 வரை இருந்து வருகிறது. இதில் 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும் உள்ளது
- இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்களாக ரூ. 1, ரூ. 2, ரூ.5, ரூ. 10, ரூ. 20 வரை இருந்து வருகிறது. இதில் 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் பல்வேறு வடிவங்களிலும், தோற்றத்திலும் உள்ளது
(1 / 6)
ரூ. 5 நாணயத்தை பொறுத்தவரை பித்தளையாலும், முதன் முதலில் வெளியிடப்பட்ட தடிமனான உலோகத்தாலும் புழக்கத்தில் உள்ளது. இதில் தடிமனான உலோக வடிவில் இருக்கும் ரூ. 5 நாணயம் புழக்கம் கணிசமாக குறைந்துள்ளதால் அதன் உற்பத்தியை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது
(2 / 6)
தடிமனான உலோக நாணயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் உலோகம் உருக்கப்பட்டு ரேஸர் பிளேடு போன்ற கூரான பொருள்கள் தயாரிக்கப்படலாம் என்பதால் அதன் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
(3 / 6)
மற்றொரு முக்கிய காரணமாக இந்த நாணயத்தை தயார் செய்வதற்கான செலவு எனவும் சொல்லப்படுகிறது. அத்துடன் ரூ. 5 நாணயத்தை உருக்கினார் 5 ரேஸர் பிளேடுகள் வரை உருவாக்க முடியும் எனவும், அதன் உற்பத்தி விலையைவிட அதிக லாபம் ரேஸர் பிளேடில் கிடைக்கும் என்பதாலும், இதில் சட்ட விரோத செயல்களும் நடப்பதால் அரசு உலோக நாணயத்தை நிறுத்த முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது
(4 / 6)
தற்போது தங்கம் போல் இருக்கும் பித்தளை நாணயங்களை அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இனி வரும் காலங்களில் உலோக நாணயங்கள் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்துவிடும் என்றே தெரிகிறது
(5 / 6)
2000ஆவது ஆண்டுக்கு பின்னர் 25 பைசா முறையாக செல்லாது என அறிவிக்கப்பட்டது. 50 பைசா நாணயத்தை பொறுத்தவரை சில்லரை தட்டுப்பாடு காரணமாக வழக்கழிந்து போனது. அதேபோல் ரூ. 1, ரூ. 2, ரூ. 5 கரன்சி நோட்டுகளும் அச்சிடுவது நிறுத்தப்பட்டன. இந்த வரிசையில் முதன் முதலில் வெளியான ரூ. 5 நாணயம் விடைபெறும் நேரத்துக்கு வந்துள்ளது
(6 / 6)
கடந்த 2016இல் பணமதிப்பு இழப்பு அறிவித்த பின்னர் பழைய ரூ. 500, ரூ. 1000 கரன்சி நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. பின்னர் புதிய ரூ. 500, ரூ. 2000 ஆயிரம் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து ரூ. 2000 ஆயிரம் கரன்சி நோட்டு நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைத்து மாற்றி கொள்ளவும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது
மற்ற கேலரிக்கள்