Relationship : ஆழ்ந்த அனுபவங்களை தரும் உணர்வுகளை நாம் கையாள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!
- Relationship : உங்கள் உணர்வுகளை கையாள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Relationship : உங்கள் உணர்வுகளை கையாள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 6)
நமக்கு கிடைத்த மற்றும் நமக்கு ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் தான் நாம் நம் வாழ்வில் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் எண்ணங்கள் இருக்கும். எனவே நமக்கு உணர்வு ரீதியான விழிப்புணர்வு தேவை. அது நமது உணர்வுகள் எவ்வாறு நமது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை காட்டுகிறது. இவற்றையெல்லாம் கடந்து நாம் நமது வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். நமது வார்த்தைகளை தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே நமக்கு உணர்வுகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். (Unsplash)
(2 / 6)
நம்முடைய உரையாடலும் நமது உணர்வுகளின் அடிப்படையில் அமையும் ஒன்றாகத்தான் இருக்கும். நமது வார்த்தைகள், நாம் அதை வெளிப்படுத்தும் விதம், நமது குரலின் டோன் என அனைத்தும் நமது அனுபவங்களின் அடிப்படையில் தான் அமையும். அனைத்துக்கும் நமது உணர்வுகளே காரணமாகும்.
(3 / 6)
நமது உணர்வுகள் நமது கோணங்களையும் மாற்றுகின்றன. நமது உணர்வுகள் நமது எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் பார்வைகளுக்கு வடிவம் கொடுக்கின்றன. நாம் நமது உணர்வுகள் தரும் அனுபவங்களின் அடிப்படையில்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். (Unsplash)
(4 / 6)
கடுமையான உணர்வுகள் சண்டைகளை கையாளும் திறன்களை வளர்த்தெடுக்கும். பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு பதிலாக நாம், பிரச்னைகளை மோசமாக்கும் விஷயங்களை தேர்ந்தெடுக்கிறோம். எனவே நமக்கு சண்டைகளும் கையாளும் திறன் என்பது மிகவும் அவசியம். அதை கைகொள்வதற்கான உத்திகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கு நமது உணர்வுகளின் வழியாக கிடைக்கும் அனுபங்கள் நமக்கு உதவும்.
(5 / 6)
நமது உணர்வுகள் நாம் முடிவுகள் எடுப்பதற்கு உதவும். நமது உணர்வுகள் நாம் முடிவு எடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நமது உணர்வுகளை கையாளும் கலையையும் நாம் கைகொள்ள வேண்டும். (Shutterstock)
மற்ற கேலரிக்கள்