தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Relationship : சண்டையை சமாளித்து உறவில் முறிவை தடுக்க உதவுகிறது அறிவியல் என்றால் நம்ப முடிகிறதா?

Relationship : சண்டையை சமாளித்து உறவில் முறிவை தடுக்க உதவுகிறது அறிவியல் என்றால் நம்ப முடிகிறதா?

Jun 10, 2024 06:30 AM IST Priyadarshini R
Jun 10, 2024 06:30 AM , IST

  • Relationship : சண்டையை சமாளித்து உறவில் முறிவை தடுக்க உதவுகிறது அறிவியல் என்றால் நம்ப முடிகிறதா?

உங்கள் உறவில் சண்டையை பராமரிப்பது எப்படி என்று அறிவியல் கூறுவது என்ன?உறவில் சண்டையை சமாளிப்பது, நீங்கள் எத்தனை வலுவானவராக இருந்தாலும், உங்களுக்கு சவால்தான். ஒவ்வொருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்த தனி வழியை கடைபிடிக்கிறார்கள். அவர்கள் வெறுப்பை கையாளவும் வெவேவ்வேறு வழிகளை பின்பற்றுகிறார்கள்.இதை அறிவியல் அடிப்படையில், மேலாண்மை செய்து, நல்ல உறவுகளை வளர்ப்பதற்கு உதவும் முறைகளை தெரிந்துகொள்ளுங்கள். இவை உங்களுக்கு புரிதல் ஏற்பட உதவும். உறவில் அனுதாபம், தொடர்புகொள்ளும் திறன், பார்ட்னர்களுக்கு இடையில் வலுவான தொடர்பு ஏற்படுத்த உதவும்.

(1 / 7)

24 மணி நேர விதி24 மணி நேர விதி என்பது, ஒரு பிரச்னை ஏற்பட்டால், அது ஆறும் வரை காத்திருக்கவேண்டும் அல்லது ஒரு நாள் அதை ஆறவிடவேண்டும். பிரச்னைகளால் ஏற்பட்ட மனக்காயங்கள் சரியாகும் வரை, காத்திருக்கவேண்டும். அப்போதுதான் உணர்வு ரீதியாக இருதரப்பும் சமாதானமாகியிருக்கும்.இந்த விதி இருவருக்கும் பதில் கொடுக்க போதிய கால அவகாசம் கொடுக்கிறது. தொடர்ந்து உரையாடுவதற்கு முன், இருவரும் உணர்வு ரீதியாக சமநிலையாகியிருக்க முடியும். இந்த விதியை பின்பற்றுவதால் உங்கள் உரையாடல் கடுமையாவது தவிர்க்கப்படும்.இந்த நேரம் எடுத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. நன்மைகள் நிறைந்த உரையாடல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இது இருவருக்கும், பிரச்னைகளை தெளிவாக்கும். புரிதலை ஏற்படுத்தும். உணர்வுகளைக் குறைக்கும். இது உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான உறவை மேம்படுத்த உதவும்.

(2 / 7)

பாதுகாப்பான வார்த்தைஉங்கள் பார்ட்னரிடம் பாதுகாப்பாக உரையாடுவது, உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். இது சண்டைகளின்போது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். இது உங்களுக்கு தெளிவாகவும், மரியாதையுடனு உரையாடும் வார்த்தைகளை தரும். இந்த ஆசவாசமான வார்த்தை உங்கள் பார்ட்னருக்கு நல்ல மனநிலையைத் தரும். உரையாடல சூடாவதை தடுக்கும். இது இருவரும் உரையாடலில் இருந்து பின் செல்ல உதவும்.சிறிது நேரம் மூச்சு எடுத்துக்கொள்ள உங்களுக்கு உதவும். உரையாடலை அமைதியாக திரும்பி பார்த்து, உங்களின் கோணத்தை உங்களுக்கு தெளிவாக உணர்த்தும். இருவரிடமும் மரியாதை மற்றும் புரிதலை ஏற்படுத்தும். உறவில் ஒருவரின் உணர்வை மற்றவர்கள் புரிந்துகொள்ள உதவும். குறிப்பாக சவாலான நேரங்களில் உதவும்.

(3 / 7)

உடல் ரீதியான தொடுதல்உடல் ரீதியான தொடுதல், சண்டைகளின்போது சிறிது ஆசுவாசத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத்தரும். தொடர்பையும், சவுகர்யத்தையும் கொடுக்கும். நல்ல தொடுதல்கள், கட்டிப்பிடிப்பது, உங்கள் உடலில் ஆக்ஸிடோசின் வெளியாக உதவும். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், பிணைப்பையும் ஏற்படுத்தும் ஹார்மோன்.இந்த ஹார்மோன் உங்களுக்கு மனஅழுத்தத்தைப் போக்க உதவும். உங்களின் டென்சனைக் குறைக்கும். இது உங்களுக்கு அனுதாபம், புரிதல் ஆகிய உணர்வுகளை ஏற்படுத்தும். இருவருக்கும் மதிப்பு அளிக்கும் மேலும் ஒருவர் மீது ஒருவருக்கு உள்ள அக்கறையையும் காட்டும். சண்டையை தள்ளி வைக்கும்.

(4 / 7)

கடிதம் எழுதுவதுகடிதங்கள் எழுதுவது, புரிதலையும், தெளிவையும் ஏற்படுத்துவதற்கு சிறந்தது. குறிப்பாக சண்டைகள் மற்றும் கடின உரையாடல்களின்போதும், சிக்கலான தலைப்புகளில் பேசும்போதும், பிரச்னைகளை அலசி ஆராயும்போதும் இது உதவுகிறது. பிரச்னைகளை அலசி ஆராயும்போது, இதுபோன்ற எழுத்துக்கள், உங்களுக்கு உதவுகிறது.உங்களின் முக்கிய கருத்துக்களை தெரிந்துகொள்ள அது உதவுகிறது. நீங்கள் அமைதியாக எழுதும்போது, உங்களின் தேவைகளை பட்டியலிட்டு அதில் குறிப்பிடுகிறீர்கள். இதனால் உங்களின் ஒவ்வொரு உணர்வுகளையும் நீங்கள் மற்ற நபருக்கு தெரியப்படுத்துகிறீர்கள்.இதனால் உங்களின் கோணத்தை புரிந்துகொள்வது எளிதாகிறது. இது உங்களுக்கு நல்ல புரிதலையும், உரையாடலையும் ஏற்படுத்த உதவுகிறது. குறிப்பாக சவாலான சூழல்களில் நீங்கள் உரையாட இது உதவுகிறது.

(5 / 7)

நான் என்பதை முன்னிலைப்படுத்தவேண்டும்அடுத்தவரை குறை கூறுவதற்கு முன், அனைத்துக்கும் நானே காரணமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் உணரவேண்டும். குறிப்பாக சண்டைகளின்போது, இது ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கும். அமைதியை ஏற்படுத்தும்.இது ஒரு நல்ல உரையாடல் முறை, இது வாக்குவாதங்களை கையாள உதவும். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இதை கையாள்வது உங்களுக்கு நல்லது. எனவே இது எனக்கு காயமளித்தது, நான் கோவமடைந்தேன் என்று கூறுங்கள்.

(6 / 7)

உன்னால் காயமடைந்தேன், உன்னால் கோவமானேன் என்று கூறாதீர்கள். எப்போது அடுத்தவர் மீது பழியை போடுவது சரியானதும் அல்ல. ஏனெனில், நமது பிரச்னைகளுக்கு நாம் தான் காரணம்.இது பிரச்னைகளை தீர்க்கும் சூழலை உருவாக்கும். இரு பார்ட்னர்களுக்கும், அவர்களின் பிரச்னைகள் குறித்து மற்றவர்கள் சிந்திக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். மேலும் அவர்களுக்கு இடையேயான பிணைப்பு அதிகமாகும்.

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்