கபில் தேவ் சாதனையை முறியடிப்பு..இந்தியா அளவில் 5வது பவுலராக எலைட் லிஸ்டில் இணைந்த ஜடேஜா
- மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
(1 / 5)
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 5 விக்கெட்டுகள் வீழ்த்திய , ஜடேஜா ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முந்தினார்.
(2 / 5)
வான்கடேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 22 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தம் 14 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் இன்னிங்சில் 12 முறை மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
(3 / 5)
சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கபில்தேவை முந்தியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. மொத்தம் 12 முறை இந்த சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். கபில் தேவ் ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை சொந்த மண்ணில் 11 முறை வீழ்த்தியுள்ளார்
(4 / 5)
சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜாவை விட மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 29 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே மொத்தம் 25 முறை இந்த சாதனையை படைத்துள்ளார். ஹர்பஜன் சிங் உள்நாட்டில் நடந்த டெஸ்டில் மொத்தம் 18 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
(5 / 5)
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5வது இடத்தைப் பிடித்துள்ளார் ஜாஹீர் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் 145 இன்னிங்ஸ்களில் 314 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இஷாந்த் மற்றும் ஜாகிர் ஆகியோர் தங்களது டெஸ்ட கிரிக்கெட்டில் தலா 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அனில் கும்ப்ளே (619), ரவிச்சந்திரன் அஷ்வின் (533), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் மட்டுமே ஜடேஜாவை விட முன்னணியில் உள்ளனர்
மற்ற கேலரிக்கள்