Ashwin Beat Sunil Narine: ஐபிஎல் போட்டிகளில் 5வது பவுலராக சாதனை! சுனில் நரேனை முந்திய ரவிச்சந்திரன் அஸ்வின்
- Ravichandran Ashwin overtakes Sunil Narine: இதுவரை அஸ்வின் 211 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அவரது சராசரி 29.58 ஆகவும், எகானமி 7.10 உள்ளது. தற்போது அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது பவுலராக மாறியுள்ளார்.
- Ravichandran Ashwin overtakes Sunil Narine: இதுவரை அஸ்வின் 211 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அவரது சராசரி 29.58 ஆகவும், எகானமி 7.10 உள்ளது. தற்போது அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது பவுலராக மாறியுள்ளார்.
(1 / 5)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய ஸ்பின்னராக இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், எலிமிணேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்தார். 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தார்
(2 / 5)
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதி்ரான போட்டியில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, பவுலிங்கில் நெருக்கடி தந்த அஸ்வின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்(ANI)
(3 / 5)
இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்பின் பவுலரான சுனில் நரேனை முந்தியுள்ளார் அஸ்வின். அஸ்வின் இதுவரை 211 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 180 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது சராசரி 29.58 எனவும், எகானமி 7.10 ஆகவும் உள்ளது. அஸ்வின் சிறந்த பவுலிங் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் ஆகும். நரேனை பொறுத்தவரை 176 போட்டிகளில் 179 விக்கெட்டுகளை, 25.44 சராசரியில் எடுத்துள்ளது. இவரது சிறந்த பவுலிங் 19 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் ஆகும்
(4 / 5)
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் மற்றொரு ஸ்பின்னரான யஸ்வேந்திரா சஹால் உள்ளார். அவர் 159 போட்டிகளில் 205 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சஹால் சராசரி 22.28 ஆகவும், எகானமி 7.83 எனவும் உள்ளது. அவரது சிறந்த பவுலிங் 40 ரன்களுக்கு 5 விக்கெட் ஆகும்
மற்ற கேலரிக்கள்