சென்று வாருங்கள் எனது கலங்கரை விளக்கமே.. ரத்தன் டாடாவின் இளம் நண்பர்.. யார் இந்த சாந்தனு நாயுடு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சென்று வாருங்கள் எனது கலங்கரை விளக்கமே.. ரத்தன் டாடாவின் இளம் நண்பர்.. யார் இந்த சாந்தனு நாயுடு?

சென்று வாருங்கள் எனது கலங்கரை விளக்கமே.. ரத்தன் டாடாவின் இளம் நண்பர்.. யார் இந்த சாந்தனு நாயுடு?

Published Oct 10, 2024 01:34 PM IST Divya Sekar
Published Oct 10, 2024 01:34 PM IST

  • Ratan tata Friend : தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவை நம் நாடு இழந்துவிட்டது. அவரது நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடு தனது சிறந்த நண்பரை இழந்துவிட்டதாக லிங்க்ட்இன் இல் பதிவிட்டார்.

லிங்க்ட் இன் பக்கத்தில் சாந்தனு நாயுடு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். அன்பின் விலை துக்கம்தான். சென்றுவாருங்கள், எனது கலங்கரை விளக்கமே! எனப் பதிவிட்டுள்ளார்.

(1 / 4)

ரத்தன் டாடா மற்றும் சாந்தனுவின் நட்பு 2014இல் உருவானது. அவர்கள் இருவரும் விலங்கு பிரியர்கள். அதுவே அவர்களின் நட்புக்கு வழிவகுத்தது. 2014 ஆம் ஆண்டில், சாந்தனு தெரு நாய்களுக்கான காலர் பெல்ட்டை உருவாக்கி சில தெரு நாய்களின் கழுத்தில் அணிவித்தார். இரவின் இருட்டில் தெரு நாய்கள் கார்கள் மீது மோதுவதைத் தடுக்க சாந்தனு ஒரு பெல்ட்டை உருவாக்கினார். அவரது முயற்சிகள் ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்த்தன.  

(2 / 4)

அப்போது ரத்தன் டாடா சாந்தனுவை தன்னிடம் வேலை செய்ய அழைத்தார். சாந்தனு நாயுடு கடந்த 10 ஆண்டுகளாக ரத்தன் டாடாவுடன் பணியாற்றி வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக, சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவுடன் எப்போம்  உடன்  இருப்பார்.

(3 / 4)

பிரபல தொழிலாளர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

(4 / 4)

(AFP)

மற்ற கேலரிக்கள்