தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Ramarajan: ‘அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரா?..யார் சொன்னா? - ராஜ்கிரணை திருப்பி போட்டு பொளந்த ராமராஜன்!

Actor Ramarajan: ‘அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரா?..யார் சொன்னா? - ராஜ்கிரணை திருப்பி போட்டு பொளந்த ராமராஜன்!

May 24, 2024 07:54 PM IST Kalyani Pandiyan S
May 24, 2024 07:54 PM , IST

Ramarajan: “ராஜ்கிரண் என்னை வைத்து படம் தயாரித்து, எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான்தான் அவருக்கு கால் சீட் கொடுத்து படம் தயாரிக்கச் சொன்னேன்.” - ராமராஜன்!

Actor Ramarajan: ‘அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரா?..யார் சொன்னா? - ராஜ்கிரணை திருப்பி போட்டு பொளந்த ராமராஜன்!

(1 / 6)

Ramarajan: பிரபல நடிகரான ராமராஜன், ராஜ்கிரண் உடனான கருத்து மோதல் குறித்து, நக்கீரன் ஸ்டியோ சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசி இருக்கிறார். கொந்தளித்த ராமராஜன்: இது குறித்து அவர் பேசும் போது, “ராஜ்கிரண் என்னை வைத்து படம் தயாரித்து, எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான்தான் அவருக்கு கால் சீட் கொடுத்து படம் தயாரிக்கச் சொன்னேன். அப்போதுதான் எனக்கு திருமணம் ஆகி இருந்தது. தயாரிப்பாளர் டி கே போஸ் தயாரிப்பில் ‘ என்னை விட்டு போகாதே’ திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தேன். டி கே போஸூம்  ராஜ்கிரணும் நண்பர்கள்.   

(2 / 6)

இந்த நிலையில், டி கே போஸ் ஒருமுறை ராஜ்கிரணை என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அவர் ராஜ்கிரண் சில படங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், நீ ஒரு படம் செய்து கொடு என்றும் கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நான் அவரிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு, ‘ராசாவே உன்னை நம்பி’ படத்தில் நடித்துக்கொடுத்தேன். அந்த படத்தில் சரிதா எனக்கு அண்ணியாகவும், ராதாரவி அண்ணனாகவும் நடித்திருப்பார்கள்.  

(3 / 6)

அடுத்தப்படத்திலும் கால்சீட்கதையின் படி, ராதாரவி மிலிட்டரியில் இருக்கும் பொழுது, சரிதா கர்ப்பமாக மாறுவார். அப்போது ராதாரவி என் மீது சந்தேகப்பட்டு என்னை அடித்து விடுவார். அவர் என்னை அடித்த உடனே நான் மனம் உடைந்து அழுவேன். அந்த தருணத்திற்கு இளையராஜா பாட்டு ஒன்றை இசையமைத்து இருந்தார். அந்த பாடல்  ‘சீதைக்கு ஒரு ராவணன் தான் தீக்குளிக்க தேதி வச்சான்’. இந்த பாடலை ராஜ்கிரண் பாட ஆசைப்படுவதாக சொல்லி, என்னிடம் டி கே போஸ் சொன்னார். அதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், அவர் ஆசைப்படுவதாக சொல்ல, சரி பாடி விட்டுப் போகட்டும் என்று நானும் விட்டுக் கொடுத்து விட்டேன். சிறுமலையில் படம் முடிந்தது. ராஜ்கிரன் என்னிடம் வந்து கை கொடுத்தார். நானும் கை கொடுத்து நன்றாக இருங்கள் என்று சொன்னேன். அப்போது அவர் அடுத்து சிராஜ் தான் டைரக்ட் செய்கிறார். படத்தின் பெயர்  ‘என்ன பெத்த ராசா’ என்று சொன்னார். அந்த பெயரை சொன்ன உடனேயே, நான் அப்படியே ஷாக்காகி நின்றேன்.   

(4 / 6)

இரண்டு கதாநாயகிகளா? உடனே மியூசிக் யாரென்று கேட்டேன் இளையராஜா என்று சொன்னார்கள். அந்தப்படத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். பூஜை தொடங்கியது. பத்திரிகைகள் எல்லாம் அடித்து விட்டார்கள். பத்திரிக்கையை பார்த்தபோது, அதில் இரண்டு கதாநாயகிகள் இருந்தார்கள். எனக்கு அதிர்ச்சி உண்டாகிவிட்டது. இதனையடுத்து நான் சிராஜிடம் கதையை வந்து வீட்டிற்கு சொல்லுமாறு சொல்லிவிட்டேன்.    

(5 / 6)

அவர் வீட்டிற்கு வந்து படத்தில், ஒரு பெண்ணை காதலித்து, நீங்கள் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்கிறீர்கள் என்று சொன்னார். இதையடுத்து நான் மிகவும் கோபம் அடைந்து, வாழ்க்கையிலேயே ஒரு பெண்ணை காதலித்து அவளையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருப்பவன் நான்.படத்தில் மட்டும் எப்படி அப்படி நடிக்க முடியும் என்று சொல்லி,ஒரு கதாநாயகியை தூக்குங்கள் என்று சொல்லிவிட்டேன்.இதையடுத்து ஒரு கதாநாயகியை தூக்கிவிட்டு, அந்தக் கதையை மாற்றினார்கள். அந்த படமும் நன்றாக சென்றது. இதையடுத்து மீண்டும்  ‘பெத்தவ மனசு’ படத்தில் நாங்கள் இருவரும் இணைந்தோம். அந்த படத்தில் எனது பெயரை டைரக்டராக போட்டுக்கொள்ள ராஜ்கிரண் கேட்டார்.  முதலில் தயங்கிய நான் பின்னர் ஓகே என்றேன். அதில் துணை இயக்குனராக கே எஸ் ரவிக்குமார் வேலை பார்த்தார். ராஜ்கிரண் செய்த துரோகம்இதற்கிடையே அவருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்து அவர் சென்று விட்ட நிலையில், சில பிரச்சினைகள் காரணமாக படம் நின்றது. அடுத்து சில படங்கள் ட்ராப் ஆனது. இதையடுத்து  படத்திற்கு கஸ்தூரி ராஜா டைரக்டர் என்று சொல்லி, ராஜா அண்ணனை இசையமைக்க சொல்ல, அவரோ முதலில் படத்தை எடுத்து வாருங்கள். பின்னர் இசை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இதையடுத்து படத்தை எடுத்து, ராஜா அண்ணனிடம் போட்டு காண்பித்தால், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால், அந்தப் படத்தை ராஜ்கிரண் ரிலீஸ் செய்யவில்லை. காரணம், நான் மீண்டும் திரைத்துறையில் மேலே வந்து விடுவேன் என்று வேண்டுமென்றே அதனைச் செய்தார். இதுதான் நடந்தது. ஆகையால், ராஜ்கிரண் எனக்கு படம் கொடுக்கவில்லை. நான் தான் அவருக்கு இரண்டு படம் கொடுத்திருக்கிறேன். அவர் சில இடங்களில் அவர்தான் எனக்கு படம் கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். அது தவறாக இருக்கலாம்” என்று பேசினார்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்