“பாகுபலி கதையை கேட்டுட்டு பண்ண மாட்டேன் சொல்லிட்டார்.. ஆனா அவர் எடுத்த முடிவு” - ராஜமெளலி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  “பாகுபலி கதையை கேட்டுட்டு பண்ண மாட்டேன் சொல்லிட்டார்.. ஆனா அவர் எடுத்த முடிவு” - ராஜமெளலி!

“பாகுபலி கதையை கேட்டுட்டு பண்ண மாட்டேன் சொல்லிட்டார்.. ஆனா அவர் எடுத்த முடிவு” - ராஜமெளலி!

Nov 17, 2024 03:22 PM IST Kalyani Pandiyan S
Nov 17, 2024 03:22 PM , IST

உண்மையைச் சொல்லப்போனால், நான்தான் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன். காரணம் எனக்கு சூர்யாவை அவ்வளவு பிடிக்கும். - ராஜமெளலி 

“பாகுபலி கதையை கேட்டுட்டு பண்ண மாட்டேன் சொல்லிட்டார்.. ஆனா அவர் எடுத்த முடிவு” - ராஜமெளலி!

(1 / 7)

கங்குவா திரைப்படத்தை படக்குழு தெலுங்கில் படத்தை புரோமோட் செய்வதற்காக சென்று இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமெளலி வந்திருந்தார். அப்போது அவர் பாகுபலி கதையை சூர்யா நிராகரித்த கதையை பகிர்ந்தார். 

(2 / 7)

அப்போது பேசிய அவர், “நான் இங்கு வெளிப்படையாக பேச விரும்புகிறேன். தெலுங்கு சினிமா இன்று இப்படி மாறியதற்கு மிக முக்கியமான இன்ஸ்பிரேஷன் நடிகர் சூர்யாதான். 

(3 / 7)

காரணம், கஜினி படத்தின் போது, அந்தப்படத்தை புரோமோட் செய்ய அவர் இங்கே வந்திருந்த விதம், அது மட்டுமல்ல, அந்தப்படத்திற்காக அவர் செய்த இன்ன பிற விஷயங்கள் எங்களுக்கு ஒரு படத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு படிப்பினையாக அமைந்தது. 

(4 / 7)

அந்த படிப்பினையை தெலுங்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் எடுத்துக்கொண்டோம். பாகுபலி திரைப்படத்தை நான் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷன் சூர்யாதான்.” என்றார்.

(5 / 7)

சூர்யா நேர்காணல் ஒன்றில் பாகுபலி படத்தின் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக கூறினார். உண்மையைச் சொல்லப்போனால், நான்தான் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன். காரணம் எனக்கு சூர்யாவை அவ்வளவு பிடிக்கும். 

(6 / 7)

அவருடைய நடிப்பு அவ்வளவு பிடிக்கும். அவர் திரையில் தோன்றும் விதம் அவ்வளவு பிடிக்கும். பாகுபலி படத்தில் நான் நடிக்கவில்லை என்று நீங்கள் எடுத்த முடிவை நான் மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இயக்குநர் யார் என்பதை மீறி, கதை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்கள்.” என்று பேசினார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்