கடுப்பில் கன்னா பின்னாவென்று திட்டிய பிசி ஸ்ரீராம்.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த வடிவேலு! - தேவர்மகன் சம்பவம் தெரியுமா?
பிசி ஸ்ரீ ராம், கடுப்பில் பயங்கரமாக அவரை திட்டுனார். அப்பொழுது வடிவேலுவால் எதுவும் பேச முடியாது. ஏனென்றால் அது அவர் வளர்ந்து வந்த காலம். ஆனால் பின்னாளில் வடிவேலு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தார். - ராஜகம்பீரன்!
(1 / 6)
கடுப்பில் கன்னா பின்னாவென்று திட்டிய பிசி ஸ்ரீராம்.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த வடிவேலு! - தேவர்மகன் சம்பவம் தெரியுமா?
(2 / 6)
பிரபல பத்திரிகையாளரான ராஜகம்பீரன் வடிவேலு குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்தார்.இது குறித்து அவர் பேசும் போது, “ராஜ்கிரண் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 3 வருடங்கள் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் வடிவேலு.
(3 / 6)
இதனையடுத்துதான் ராஜ்கிரண் வடிவேலுவை தன்னுடைய திரைப்படங்களில் நடிக்க வைத்து, அவருக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தார். ராஜ்கிரணுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து. அப்படித்தான் சிங்கமுத்து வடிவேலுவுக்கு அறிமுகமானார். வடிவேலு தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்க, அவருக்கு வெளிப்படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்தன. அப்படி வந்த வாய்ப்புகள் தான் சின்னக் கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள்
(4 / 6)
தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தவுடன் வடிவேலு தனக்கென ஒரு குழுவை செட் செய்தார். அந்தக் குழு தான் அவருக்கு சினிமாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி சம்பளம் பேச வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள் தேவர்மகன் படத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.
(5 / 6)
அது முழுக்க, முழுக்க கிராமம் சார்ந்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் நிறைய வைடு ஷாட்கள் இருக்கும். வைடு ஷாட் எனும் பொழுது அத்தனை பேரையும் ஒழுங்காக செட் செய்த பின்னால்தான் கேமராவை வைக்க முடியும். அப்படி ஒவ்வொரு முறை வைத்து எடுக்கும் பொழுது. ஒருவர் அங்கும் இங்கும் குறுக்கே சென்று கொண்டே இருந்தார். யாரென்று பார்த்தால்,அது வடிவேலு.
(6 / 6)
இதைப்பார்த்த பிசிஸ்ரீ ராம், கடுப்பில் பயங்கரமாக அவரை திட்டுனார். அப்பொழுது வடிவேலுவால் எதுவும் பேச முடியாது. ஏனென்றால் அது அவர் வளர்ந்து வந்த காலம். ஆனால் பின்னாளில் வடிவேலு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தார். படங்களில், காமெடி சார்ந்த காட்சிகளை அவரே இயக்கும் அளவிற்கு அவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அப்படி ஒரு படத்தில் அவர் காமெடியனாக நடிக்க, அந்த படத்திற்கு பி சி ஸ்ரீராம் கேமராமேனாக வந்தார். அப்போது வடிவேலு பிசி ராமிடம் நான் எப்படி காட்சியை சொல்கிறேனோ, அதற்கேற்றபடி கேமராவை வையுங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பி சி ஸ்ரீராம் அதைப்பற்றி எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை ஏனென்றால் பி சி சி ராம் எப்பொழுதுமே மற்றவர்களின் வளர்ச்சியை வாஞ்சையோடு பார்ப்பவர்.
மற்ற கேலரிக்கள்