Vairamuthu: கவிதைகள் கொடுத்த கோளாறு.. தடை போட்ட சாதிய பெருமை.. முட்டித்தூக்கி மூத்த பெண்ணை கரம் பிடித்த வைரமுத்து!
இதைப் பார்த்த தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன், பச்சையப்பன் கல்லூரிக்கே சென்று, யார் இந்த வைரமுத்து என்று தேடி இருக்கிறார். அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவராக வைரமுத்து இருந்தார். ஆனால் கல்லூரி விதிகளின்படி, ஒரு மாணவர் எழுதிய கவிதை தொகுப்பை, ஒரு பேராசிரியர் பாடமாக நடத்த முடியாது.
(1 / 5)
பிரபல பத்திரிகையாளரான ராஜகம்பீரன் வைரமுத்து குறித்து ஆதன் தமிழ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “ கவிஞர் வைரமுத்து ஒரு ஆகச் சிறந்த கவிஞன். அவரது 19ஆவது வயதிலேயே அவரது கவிதை தொகுப்பு வெளிய வந்துவிட்டது. அவரது முதல் கவிதை தொகுப்பு வைகறை மேகங்கள். அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அதை பாடத்திட்டத்தில் கொண்டு வந்து விட்டார்கள். இதைப் பார்த்த தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன், பச்சையப்பன் கல்லூரிக்கே சென்று, யார் இந்த வைரமுத்து என்று தேடி இருக்கிறார். அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவராக வைரமுத்து இருந்தார். ஆனால் கல்லூரி விதிகளின்படி, ஒரு மாணவர் எழுதிய கவிதை தொகுப்பை, ஒரு பேராசிரியர் பாடமாக நடத்த முடியாது. அது விதிகளுக்கு புறம்பானது. ஆகையால் அவரது கவிதை தொகுப்பு அந்த பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. வைரமுத்துவுக்கு பேராசிரியராக ஆக வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.
(2 / 5)
அது விதிகளுக்கு புறம்பானது. ஆகையால் அவரது கவிதை தொகுப்பு அந்த பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. வைரமுத்துவுக்கு பேராசிரியராக ஆக வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார். (vikatan )
(3 / 5)
வைரமுத்துவின் மனைவியான பொன்மணி, பச்சையப்பன் கல்லூரியிலேயே ஒரு ஆண்டு முந்தைய வகுப்பில் இருந்தார். வைரமுத்துவை விட பொன்மணி ஒரு வயது மூத்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே கவிதை சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்து, அவை பின்னாளில் காதலாக மாறியது. பொன்மணி பேராசிரியரின் மகள். ஆனாலும், பொன்மணியை கல்யாணம் செய்து கொண்டார் வைரமுத்து. இரண்டு பேரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இதற்கு இரு தரப்பிலும் பயங்கர எதிர்ப்பு இருந்தது. அதனால், மிகவும் சிரமமான வாழ்க்கையையே வைரமுத்து எதிர்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். இரு தரப்பிலும் கைவிடப்பட்டு, பொருளாதார நெருக்கடியில், சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம் அது.
(4 / 5)
முதலில், சினிமாவுக்குள் வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்குள் கிடையாது. காரணம் அப்போதே அவர் சினிமாவுக்கு எதிராக கவிதை எழுதினார். ஆனால் அவருடைய படைப்புகள் அனைத்தும் அவர் எதிர்பார்த்தபடி மக்களிடம் சென்று சேரவில்லை. ஆகையால்தான் தன்னுடைய படைப்பின் மீதான கவனத்தை அதிகரிக்க, அவர் சினிமா என்ற அந்த ஆயுதத்தை கையில் எடுத்தார். இதனையடுத்துதான் அவர் பாரதிராஜாவை சந்திக்க முடிவு எடுத்து, அவரை பார்ப்பதற்காக தினம் தினம் நடந்தார். ஆனால் அப்போதெல்லாம், ஒரு பிரபல இயக்குநரை பார்ப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.
(5 / 5)
ஆனாலும், வைரமுத்து தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை கிட்டத்தட்ட ஒரு வருடம் நடையாய் நடந்தார். இறுதியாக அவர் எதிர்பார்த்த நாள் வந்தது. அவர்களது உதவியாளர்கள் வழக்கம்போல் பாரதிராஜா பிசியாக இருக்கிறார் என்று சொல்லும் பொழுதே, பாரதிராஜா அங்கிருந்து வந்துவிட்டார். இதையடுத்து அவரிடம் பேசிய வைரமுத்து, தன்னுடைய கவிதை தொகுப்பை கொடுத்து, வாய்ப்பு இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்று தன்னம்பிக்கையுடன் பேசினார்." என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்