Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!

Rajinikanth: 3 மாதம் படுத்த படுக்கை.. தலைக்கு மேலே ஏறிய வட்டி.. 10 லட்சம் பணப்பெட்டியை திருப்பி அனுப்பிய ரஜினி - ராஜன்!

Nov 12, 2024 12:21 AM IST Kalyani Pandiyan S
Nov 12, 2024 12:21 AM , IST

அப்போதும் கூட அவர் வேறு படத்திற்கு செல்லவில்லை. மூன்று மாதங்கள் உடலுக்கு தேவையான சிகிச்சையை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் மீண்டும் கால் சீட்டை கொடுத்தார். அந்த படத்தில் முறைப்படி நடித்துக் கொடுத்தார். படம் வெளியே வந்தது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. - ராஜன் 

Producer K Rajan: ‘தங்கமகன்’ திரைப்படத்தின் போது ரஜினி செய்த நெகிழ்ச்சியான செயல் ஒன்றை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.மிஸ்டர் கிளீன்இது குறித்து அவர் பேசும் போது, “ரஜினிகாந்த் இந்த 72 வயதிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கால்ஷீட் கொடுத்தால் அது தவறவே தவறாது. கால்ஷீட் கொடுத்த அந்த படம் முடியும் வரை, வேறு படத்திற்கும் செல்ல மாட்டார்.

(1 / 5)

படப்பிடிப்பில் காலை 7:30 மணிக்கெல்லாம் மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாக இருப்பார். 5 நிமிடத்தை கூட வீணாக்க மாட்டார். கேரவனில் உட்கார்ந்து கொண்டு சீட்டு ஆடுவது அல்லது யாருடனாவது போன் பேசிக் கொண்டிருப்பது உள்ளிட்ட வேலைகள் எல்லாம் ரஜினியிடம் சுத்தமாக இருக்காது. அவர் வந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருப்பார். வேலையின் மீது மட்டுமே அவரது கவனம் இருக்கும். 

(2 / 5)

‘தங்கமகன் ரஜினி’சத்யா மூவிஸ் தயாரித்த ‘தங்கமகன்’ திரைப்படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. அதன் காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவர் படப்பிடிப்பிற்கே செல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆனால், அப்போதும் கூட அவர் வேறு படத்திற்கு செல்லவில்லை. மூன்று மாதங்கள் உடலுக்கு தேவையான சிகிச்சையை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் மீண்டும் கால் சீட்டை கொடுத்தார். அந்த படத்தில் முறைப்படி நடித்துக் கொடுத்தார். படம் வெளியே வந்தது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

(3 / 5)

சத்யா மூவிஸ் ரஜினியின் சம்பளத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயை பாக்கி வைத்திருந்தார்கள்.இதையடுத்து அவர்கள் அந்த பணத்தை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி அந்த பணத்தை அவரது கம்பெனி தரப்பிலிருந்து அவருக்கு ஷூட்கேசில் அனுப்பினார்கள்.அப்போது பத்து லட்சம் என்பது மிகப் பெரிய தொகை. ரஜினியின் கைக்கு பணம் கிடைத்த மூன்றாவது நாள் ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர், அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சத்யா மூவிஸ் ஆர்.எம். வீரப்பன் வீட்டிற்கு வந்தார்கள் அவர்களிடம் அவர்கள் கையில் சத்யா மூவிஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பணப்பெட்டி அப்படியே இருந்தது.  

(4 / 5)

அவர்கள் ஆர்.எம் வீரப்பனிடம் நீங்கள் ரஜினிக்கான சம்பள பாக்கி கொடுத்து அனுப்பினீர்கள். ஆனால் ரஜினி அதை திருப்பிக் கொடுக்க சொல்லிவிட்டார். மூன்று மாதம் அவரால் படபிடிப்பு நின்றது. அதற்கான வட்டித்தொகை, செலவு உள்ளிட்டவை அனைத்தையும் நீங்கள் ஏற்று இருப்பீர்கள். அதை சமன் செய்ய இதை பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார் என்று அவர்கள் கூறினார்கள்” என்று பேசினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்