தங்கர்பச்சானால் பிரபு சாருக்கு நேர்ந்த அவமானம்.. ஒன்பது ரூபாய் நோட்டு படபூஜைக்கே 2.5 லட்சம் பில்.. பாலாஜி பிரபு பகீர்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தங்கர்பச்சானால் பிரபு சாருக்கு நேர்ந்த அவமானம்.. ஒன்பது ரூபாய் நோட்டு படபூஜைக்கே 2.5 லட்சம் பில்.. பாலாஜி பிரபு பகீர்

தங்கர்பச்சானால் பிரபு சாருக்கு நேர்ந்த அவமானம்.. ஒன்பது ரூபாய் நோட்டு படபூஜைக்கே 2.5 லட்சம் பில்.. பாலாஜி பிரபு பகீர்

Nov 11, 2024 03:56 PM IST Marimuthu M
Nov 11, 2024 03:56 PM , IST

  • தங்கர்பச்சானால் பிரபு சாருக்கு நேர்ந்த அவமானம்.. ஒன்பது ரூபாய் நோட்டு படபூஜைக்கே 2.5 லட்சம் பில்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பகீர் பேட்டியளித்துள்ளார். 

தங்கர்பச்சானால் பிரபு சாருக்கு நேர்ந்த அவமானம் பற்றியும், ஒன்பது ரூபாய் நோட்டு படபூஜைக்கே 2.5 லட்சம் பில் வந்தது எனவும் பாலாஜி பிரபு பகீர் பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். 

(1 / 6)

தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மீடியா சர்கிள் யூட்யூப் சேனலில் பேசியதாவது, ‘ என்னைப் பொறுத்தவரை தங்கர் பச்சான் ஒரு சிறந்த நடிகர், சிவாஜியை விட சிறந்த நடிகர். ஏனென்றால், நிஜ வாழ்விலும் நடிகர் தங்கர் பச்சான் சிறந்த நடிகர். 1985-ல் பவுர்ணமி அலைகள் என்கிற படம், அப்பா வந்து புரொடியூசர் மற்றும் டைரக்டர். ஒளிப்பதிவாளர் விஸ்வம் நடராஜ்ன்னு பெயர். அந்த சூட்டிங்கில் காமெடி சீன் எடுக்கும்போது, ஒருத்தர் சிரிச்சுவிடுகிறார். அப்போது அப்பா அவரை விசாரிக்கும்போது, ஒளிப்பதிவாளர் விஸ்வம் நடராஜ் வந்து தன்னோட அஸிஸ்டென்ட் என்று சொல்கிறார். பின் அவரை அந்த இடத்தை விட்டு வெளியேற்றச் சொல்கிறார். அவர் தான் தங்கர் பச்சான். அப்போது அவர் பெயர் தங்கராஜ்.அடுத்து அவர் சோகமாக இருக்கிறதைப் பார்த்துட்டு, பின் அப்பாவே மதிய உணவு இடைவெளியில் சமாதானப்படுத்துகிறார். பிறகு அவரை விசாரிக்கும்போது, இதே மாதிரி சேட்டைகளை தங்கர் பச்சான் எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களிலும் செய்கிறார் என்பது தெரிகிறது. 

(2 / 6)

தங்கர் பச்சானால் நடிகர் பிரபுவுக்கு நடந்த தர்மசங்கடம்:‘’ஒரு இடத்தில் புரொடக்சனுடைய யூனிட் சாப்பாட்டை கிண்டலடிக்கிறார். அப்போதும் தங்கர்பச்சான் கண்டிக்கப்பட்டார். இன்னொரு படம், பிரபு ஹீரோவாக நடிக்கிறார். நடிகை லட்சுமியுடைய கணவர் சிவச்சந்திரன் இயக்குநராக இருக்கிறார். படத்தோட பெயர் ரத்த தானம். ஒரு பாட்டு வி.ஜி.பியில் சூட்டிங் எடுக்கிறார்கள். அந்தப் படத்திலும் தங்கர் பச்சான் உதவி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.அப்போது குதிரையில் இருந்து வந்து ஒரு இடத்தில் வந்து நிற்கணும். அப்போது அங்கு மார்க் வைப்பாங்க. அதன்மூலம் கேமராவில் மையத்தில் படமெடுப்பவர்கள் தெரிவாங்க. அப்போது பிரபு சார் எங்கு என்னோட மார்க் அப்படின்னு கேட்குறாங்க. அப்போது, தங்கர் பச்சான் ஓடிப்போய், அந்த மார்க்கில் நின்று, நீங்க நடிப்பினைக் கொட்ட வேண்டிய இடமே இதுதான் சார்ன்னு சொல்லி சிரிச்சிருக்கார். யூனிட்டில் இருக்கிற எல்லாரும்பார்த்து சிரிச்சிட்டாங்க. இது பிரபு சாருக்கு அவமானமாகப் போயிடுது. உடனே, ஒளிப்பதிவாளர் நடராஜன்கிட்ட அடுத்த ஷாட்டில் இந்தப் பையன் இங்கு இருக்கக் கூடாதுன்னு சொல்றார். இந்த மாதிரி உதவி ஒளிப்பதிவாளராக இருக்கும்போதே பல சேட்டைகளை தங்கர் பச்சான் செய்துகொண்டே தான் இருந்திருக்கிறார்

(3 / 6)

‘’இப்படி தங்கர் பச்சான் ஓவரா செய்வார். இதற்கப்புறம், 2002-ல் தென்றல் படம் பார்க்க, என் அப்பாவை ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் அழைக்கிறார். நானும் அப்பாவும் போயிருக்கோம். படத்தைப் பார்த்திட்டு அப்பா, தங்கர் பச்சானை பாராட்டுகிறார். அதன்பின், அப்பாவை வந்து மறுநாள் அலுவலகத்தில் பார்க்கும் தங்கர் பச்சான், தான் எழுதிய ’ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலை அப்பா கையில் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதைப் பார்த்துட்டு அப்பா பாராட்டுகிறார்.அடுத்து மீண்டும் நேரில் வந்து பார்க்கும் தங்கர் பச்சான், எனது அப்பாவிடம் இதைப் படமாக்கணும் சார், இதை நீங்க தயாரிக்கணும்னு சொல்கிறார். உடனே, அப்பா வந்து ஓகே சொல்லிட்டார். அடுத்து சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரோகிணி எல்லாரும் முக்கிய நடிகர்களாக நடிக்கிற மாதிரி புக் பண்றாங்க. தங்கர் பச்சானுக்கு 65 லட்சம் ரூபாய் சம்பளம் பேசுறாங்க. ஏனென்றால், அழகி, சொல்ல மறந்த கதை இதெல்லாம் கொடுத்திருக்கிறார். மறுநாள் அவர் வீட்டில்போய், வெள்ளித்தட்டில் வைச்சு 15 லட்ச ரூபாய் கொடுக்கிறோம்.

(4 / 6)

ஒன்பது ரூபாய் நோட்டுக்கு படபூஜை போட்ட பில் எவ்வளவு தெரியுமா?பட பூஜைக்கு கூல் டிரிங்ஸ் வாங்க எத்தனை பேர் வருவாங்கன்னு அவருக்கு போன் அடிச்சு நான் கேட்கிறேன். அப்போது அதெல்லாம் பூச்சிக்கொல்லின்னு சொல்லிட்டு, அதை நான் பார்த்துக்கிறேன், சஸ்பென்ஸ் அப்படின்னு சொல்லிட்டார். மறுநாள் காலையில் படபூஜை நடக்கும் இடத்துக்குச் சென்றால், கிராமம் மாதிரி செட் போட்டு, அப்பத்தாக்கள் மூலமாக கம்மங்கூழை வருகிற வி.ஐ.பிகளுக்கு கொடுக்கிறாங்க.ஏ.வி.எம்.மில் பூஜை கிராண்ட்டாக நடந்தது. அப்போது ஆர்ட் டைரக்டர் வந்து பூஜையோட பில்லைக் கொடுத்தார். அந்த ஒரு நாள் செலவு மட்டும் இரண்டரை லட்ச ரூபாய். இதைப் பார்த்து ஷாக் ஆகிட்டார், அப்பா. பிறகு வருத்தப்பட்டார். அப்போது அந்த இரண்டரை லட்ச ரூபாய் இருந்தால் நான்கு நாட்கள் ஷூட் செய்திடலாம். அடுத்து டிஸ்கசன் பண்ண இரண்டு ரூம் கேட்டார். 25 நாள் கழிச்சு நானும் அப்பாவும் ஐடியல் பீச் ரிசார்ட் போறோம். அங்கு போனால், கிளிக்கு கொய்யாப்பழம் ஊட்டிட்டு இருக்கிறார், தங்கர் பச்சான்

(5 / 6)

ரூம் போட்டு டிஸ்கசன் மேல் டிஸ்கசன் செய்த தங்கர் பச்சான்:இன்னும் ஒன்பது ரூபாய் நோட்டுக் கதையை முடிக்காமல் 15 நாள் அவகாசம் கேட்கிறார். மறுநாள் கிளிக்கு கொய்யாப்பழம் வாங்கி கொடுத்த பில் மட்டும் பத்தாயிரம் ரூபாய் என்று எங்க ஆபிஸுக்கு வந்திருக்கு. அதை அப்பா பார்த்துட்டு, கொய்யாப்பழ கணக்கை கட்டிட்டு வான்னு சொல்லி என்னிடம் கிண்டலடிச்சு அனுப்பிவைக்கிறார்.அடுத்து திடீர்னு ஒருநாள் எங்களை நேரில் பார்க்க தங்கர்பச்சான் அழைச்சார். நாங்கள் தங்கர் பச்சானை நேரில் பார்க்க ரிசார்ட்டுக்குப்போறோம். அப்போது, வேறு ரிசார்ட் புக் பண்ணிக்கொடுங்கன்னு கேட்கிறார். பக்கத்தில் சுடுகாடு இருக்கு சார். எனக்கு ஒரே பயமாக இருக்குன்னு சொல்கிறார். உடனே, இந்த ரூமை வெகேட் பண்ணிட்டு வாங்கன்னு அப்பா சொல்றார். அப்போது காரில் வரும்போது அப்பா, இந்தப் படம் எடுத்தால் நாம் பெரிய நஷ்டத்தில் போயிடுவோம்ன்னு நினைக்கிறேன்னு என்கிட்ட சொல்றார். இப்போதே வெளியே வந்துவிட்டால் 40 லட்ச ரூபாய்யோடு போச்சு. இல்லையென்றால், 4 கோடி ரூபாய் நஷ்டமாகிடும்ன்னு பயப்படுகிறார். மறுநாள், இந்தப் படத்தை டிராப் பண்ணிடலாம்ன்னு தங்கர் பச்சானை நேரில் கூப்பிட்டுச் சொல்கிறோம். அடுத்து அட்வான்ஸ் பணத்தைக் கொடுக்கிறதுக்கு ரொம்பத் தகராறு செய்தார். கடைசியில் ஒன்பது ரூபாய் நோட்டு ரிலீஸ் சமயத்தில் புரொடியூசர் கவுன்சிலில் புகார் செய்து அந்த 15 லட்ச ரூபாயை வாங்கினோம்’’ எனத் தெரிவித்தார். நன்றி: மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனல் பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

(6 / 6)

மற்ற கேலரிக்கள்