“அவன இழந்தது என் வாழ்க்கையிலேயே பெரிய சோகம்.. நானும் மனுஷன்தான்.. எனக்கும் வலிக்கும்” - பிரகாஷ்ராஜ்!
நானும் மனிதன்தான். என்னையும் அது தொந்தரவு செய்யும். என்னையும் அது துன்புறுத்தும். மகனை இழந்த போது உதவியற்றவனாக உணர்ந்தேன். ஆனாலும், நான் வாழ்வதற்கான காரணங்களை கண்டுபிடித்துதானே ஆக வேண்டும். - பிரகாஷ் ராஜ்
(1 / 6)
பான் இந்தியா நடிகரான பிரகாஷ்ராஜ், அண்மையில் தன்னுடைய மகன் சித்தார்த்தின் இழப்பு தனக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார்.நானும் மனிதன்தான்.இது குறித்து அவர் பேசும் போது, “வலி என்பது மிகவும் பர்சலான விஷயம். அது என்னுடைய நண்பர் கெளரி லங்கேஷின் இறப்பாகட்டும் அல்லது என்னுடைய மகன் சித்தார்த்தின் இழப்பாகட்டும்.. இருப்பினும், என்னுடைய மகள்கள், குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் என்னால் சுயநலமாக இருக்க முடியாது.
(2 / 6)
நானும் மனிதன்தான். என்னையும் அது தொந்தரவு செய்யும். என்னையும் அது துன்புறுத்தும். மகனை இழந்த போது உதவியற்றவனாக உணர்ந்தேன். ஆனாலும், நான் வாழ்வதற்கான காரணங்களை கண்டுபிடித்துதானே ஆக வேண்டும். மரணம் என்பது, எப்போதும் இறுதியில் இருக்கிறது.” என்று பேசினார்.
(3 / 6)
முன்னதாக மகன் இழப்பு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசிய பிரகாஷ்ராஜ், “ அவனுக்கு 5 வயதாக இருந்த போது அந்த கொடிய சம்பவம் நடந்தது. சில மாதங்களாக உடல்குறைவால் பாதிக்கப்பட்ட அவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்தான். என் வாழ்க்கையில் நான் சந்தித்த துன்பங்களிலேயே பெரிய துன்பம் அவனை இழந்ததுதான்.” என்று பேசினார்.
(4 / 6)
முன்னதாக, பிரகாஷ் ராஜ் - லலிதா உறவு எப்படி முறிந்து போனது என்பது குறித்து முன்னதாக ஜெயந்தி கண்ணப்பன் தனியார் யூடியூப் சேனலுக்கு ஒன்றிற்கு சில மாதங்களுக்கு முன்னதாக பேசி இருந்தார். அதில் அவர் பேசும் போது, “ லலிதாவின் அக்காதான் டிஸ்கோ சாந்தி. வெளி இடங்களிலிருந்து இங்கு நடிக்க வருபவர்களுக்கு டிஸ்கோ சாந்தியின் வீடு ஒரு அடைக்கலமாக இருந்தது. அந்த வழியில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.
(5 / 6)
இவர் டிஸ்கோ சாந்தியின் சகோதரியை லலிதாவை பார்க்க நேருகிறது. இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு அவர்களது திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் பிறந்தன. ஒரு மகன், இரண்டு மகள்கள் சந்தோஷமான இல்லற வாழ்க்கை என அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருந்தது.
(6 / 6)
கட்டமைப்பானது உடைந்து விடும்.சினிமா உலகை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே. யாராவது உங்களது வாழ்க்கையில் புதிதாக வரும் பொழுது, ஏற்கனவே இருந்த அந்த கட்டமைப்பானது உடைந்து விடும். ஆண் மகன்கள் வெளியே செல்கிறார்கள். நிறைய பேரை பார்க்கிறார்கள். யாராவது ஒருவரிடம் தங்களது மனதை பறி கொடுத்து விடுகிறார்கள்.அப்படித்தான் பிரகாஷ்ராஜும் தன்னுடைய மனதை வெளியே பறி கொடுத்தார். இதனையடுத்து லலிதாவும் அவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.
மற்ற கேலரிக்கள்