Pongal Rangoli: நாளை பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்னு யோசிக்கிறீங்களா.. இதை முயற்சியுங்கள்!
- பொங்கல் பண்டிகைகளுக்கு உங்கள் வீட்டை வண்ணமயமான கோலங்களால் வீட்டை அலங்கரிக்க விரும்புகிறீர்களா? இங்கு சில ரங்கோலி கோலங்கள் உள்ளன. இது புஷ்பாஸ் யூடியூப் சேனல் புஷ்பவானியின் கோலங்கள்.. விபரங்களுக்கு https://www.youtube.com/@pushpasrangoli8588ஐப் பார்க்கவும்.

(1 / 6)
இது ஒரு அழகான பூக்கோலம். பூவிற்கு ரோஜா வண்ணமும், இலை காம்புகளுக்கு பச்சை வண்ணமும் கொடுத்து அழகாக கோலமிடலாம். பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கலர்களை சேர்த்து கோலத்தை மேலும் அழகாக்கலாம்,
(2 / 6)
டிசைனான இந்த ரங்கோலியை விரும்புபவர்கள் இதை முயற்சிக்கலாம். இந்த கொத்து மலர் கோலத்தை வரைந்து சரியான வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டின் முன் ஒரு கொத்து மலர்கள் அழகாக இருக்கும்.
(3 / 6)
ஒன்பது புள்ளிகள் வைத்து நடுப் புள்ளி ஐந்து வரை வைக்க வேண்டும். கிளிகளை கொண்ட இந்த கோலம் மிக அழகாக இருக்கும். வீட்டு வாசலில் வரைந்து அழகாக கலர் கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
(4 / 6)
இது பொங்கலுக்கு உகர்ந்த அழகான ரங்கோலி, அதில் நிரம்பி வழியும் பால் பானை, மாடு, காத்தாடி, சூரிய உதயம், கரும்பு மற்றும் தானியங்கள் ஆகியவை அடங்கும்.
(5 / 6)
புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதற்குப் பதிலாக பொங்கல் வாழ்த்துக்கள் என்று எழுதி, இந்தக் ரங்கோலியை வரையலாம். இந்த அழகான மயில்கள் மற்றும் பூக்களை வரைந்தால் வாசல் அழகாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்