Parvathy: ‘7 வருஷம் படமே ஓடல.. நல்ல நடிகைன்னு ஒருத்தர் கூட.. முரட்டு சிங்கிளாவே' -பார்வதி பேட்டி!-parvathy thiruvothu latest interview about lonely life and love breakup - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parvathy: ‘7 வருஷம் படமே ஓடல.. நல்ல நடிகைன்னு ஒருத்தர் கூட.. முரட்டு சிங்கிளாவே' -பார்வதி பேட்டி!

Parvathy: ‘7 வருஷம் படமே ஓடல.. நல்ல நடிகைன்னு ஒருத்தர் கூட.. முரட்டு சிங்கிளாவே' -பார்வதி பேட்டி!

Aug 18, 2024 07:55 PM IST Kalyani Pandiyan S
Aug 18, 2024 07:55 PM , IST

Parvathy: நடிப்பு என்பது என்னுடைய தொழில். அது என்னுடைய அடையாளம் அல்ல. அதை நான் பிரித்துப் பார்ப்பதற்கு, ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையேயான இடைவெளி காலத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். - பார்வதி பேட்டி!

Parvathy: ‘7 வருஷம் படமே ஓடல.. நல்ல நடிகைன்னு ஒருத்தர் கூட.. முரட்டு சிங்கிளாவே' -பார்வதி பேட்டி!

(1 / 6)

நடிகை பார்வதி, தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து தொகுப்பாளர் ரம்யா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.நான் ஒரு முரட்டு சிங்கிள்இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போதில் இருந்து இன்னும் ஒரு 11 வருடங்கள் கழிந்தால், வாழ்க்கை குறித்தான என்னுடைய பார்வை என்பது முற்றிலுமாக மாறி இருக்கும். இப்போது கூட நான் தனியாகதான் இருக்கிறேன். அதற்காக நான் காதலித்து பிரேக்கப் செய்து கொண்டு, தனியாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. நான் ஒரு முரட்டு சிங்கிள்.

(2 / 6)

இப்போதும் நான் சாதாரணமாக மருந்து கடைக்குச் சென்று, எனக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொள்கிறேன். மக்கள், நீங்கள் எந்தவிதமாக உங்களை வெளிப்படுத்துகிறீகளோ, அப்படித்தான் உங்களை அணுகுவார்கள்.  என்னைப் பற்றி மக்கள் கொஞ்சம் ஆர்வமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான விஷயங்களை பி. ஆர் மூலமாக நான் செய்து விடுவேன். ஆனால் இன்றைய தினம் எல்லாமே ஒரு திறந்த புத்தகம்தான். நாம் மக்களிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. எல்லா திட்டமும் அவர்களுக்குத் தெரியும்.

(3 / 6)

நான் என்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும்என்னுடைய திட்டம் என்னவென்றால், நான் என்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும். இரவு படுக்கைக்கு சென்றால், நிம்மதியாக தூங்க வேண்டும். இதுதான் என்னுடைய திட்டம். இப்போது எனக்குத் தேவையான பொருட்களை நான் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கிறேன். ஆனாலும் நான் வாங்கிய வெண்டைக்காய் ஒழுங்கானதாக இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, நான் அதனை உடைத்துப் பார்த்து வாங்க வேண்டும் இல்லையா? 

(4 / 6)

நடிப்பு என்பது என்னுடைய தொழில். அது என்னுடைய அடையாளம் அல்ல. அதை நான் பிரித்துப் பார்ப்பதற்கு, ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையேயான இடைவெளி காலத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.

(5 / 6)

நான் மகிழ்ச்சி பட்டுக்கொண்டிருந்தேன்.அந்த காலங்களில் வெளியே இருந்து எனக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்க வில்லை. ஆனால் வாழ்க்கையில் அந்த நேரம் என்பது எனக்கு மிக மிக சிறந்த நேரமாக இருந்தது. காரணம் என்னவென்றால், வெளியே எனக்கு அங்கீகாரம் வரவில்லை என்றாலும், என்னுடைய வேலையை நான் மதித்து, ஒழுங்காக செய்வது என்பது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. அதிலிருந்து கிடைக்கக்கூடிய திருப்தியில், நான் மகிழ்ச்சி பட்டுக்கொண்டிருந்தேன்.  திடீரென்று ஒரு நாள் ஒரு படம் ஹிட்டானது. அடுத்ததாக அடுத்தப்படமும் ஹிட்டானது. என்னுடைய நண்பர் சொல்வார். வெற்றி போல எதுவும் உன்னை தோற்கடிக்க முடியாது என்று… வெற்றி வந்துவிட்டால், வெளியே இருந்து மனது அங்கீகாரத்தை தேட ஆரம்பித்து விடும். மதிப்பை எதிர்பார்க்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மதிப்பு என்பது எனக்குள்ளே இருந்து வர வேண்டும். இன்று நான் எப்படியான ஒரு மனுஷியாக இருக்கிறேன் என்பதுதான் இங்கு முக்கியமானது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்