Parenting Tips : உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியது இதைத்தான்!
- Parenting Tips : உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியது இதைத்தான்!
- Parenting Tips : உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியது இதைத்தான்!
(1 / 10)
உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியவைஒவ்வொரு பெற்றோருக்கும், தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வியை உறுதிப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதை நன்றாக புரிந்துகொள்வதற்கு, அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் கட்டாயம் உரையாட வேண்டும். அப்போதுதான் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுக்கு எப்படி உதவமுடியும் என்பது தெரியும். எனவே உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 10)
வகுப்பில் தடுமாறும் குழந்தைகளை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பதற்கு, ஆசிரியர்கள் கையாளும் முறைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு குழந்தைகளின் தேவைகள் எப்படி புரிகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும் அதற்கு உதவ என்னனென்ன வழிகள் உள்ளன என்பதையும் கேளுங்கள். அது உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
(3 / 10)
கிரியேட்டிவிட்டி மற்றும் இன்னோவேட்டிவ் சிந்தனைகளை வளர்த்தெடுக்க பள்ளியில் என்ன கற்றுக்கொடுக்கிறீர்கள்?உங்கள் குழந்தைக்கு கிரியேட்டிவிட்டி மற்றும் இன்னோவேசன் சிந்தனைகள் வளரவேண்டுமெனில், இந்த திறன்கள் அவர்களுக்கு வகுப்பறையில் வளர்த்தெடுக்கப்படுகிறதா என்பது தெரியவேண்டும். இந்த திறன்களை அவர்கள் வெளியேயும் வளர்த்தெடுக்கவேண்டும். எனவே குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் ப்ராஜெக்ட்களை உங்கள் குழந்தைகள் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் கிரியேட்டில் சிந்தனைகள் மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை அதிகரிக்க ஊக்கப்படுத்துங்கள்.
(4 / 10)
எனது குழந்தை சவால்களையும், பின்னடைவுகளையும் எப்படி கையாள்வது?உங்கள் குழந்தைகள் சவால்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறதா? அவர்கள் பின்னடைவுகளை சந்திக்கும்போது அவர்கள் எப்படி மீண்டெழுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த தகவல், உங்கள் குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை நன்றாக வளர்த்தெடுக்க உங்களுக்கு உதவும்.
(5 / 10)
வகுப்பறையில் படிப்பதில் உள்ள பொதுவாக தடைகள் என்ன?உங்கள் குழந்தைகளுக்கு பொதுவாக உள்ள தடைகள் என்னவென்று தெரிந்துகொண்டால், அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு உதவ உங்களால் முடியும். அது கல்வியாக இருக்கலாம் அல்லது வெளியில் உள்ள காரணங்களாக இருக்கலாம், இந்த தடைகளை புரிந்துகொள்வது உங்களுக்கும், உங்கள் ஆசிரியர்களும் சேர்ந்து உழைக்கும்போது, இந்த பிரச்னையை நீங்கள் சரியாக தீர்ப்பதற்கு உதவும்.
(6 / 10)
குழந்தைகளின் பலம் மற்றும் பலவீனத்தில் எப்படி கவனம் செலுத்துவது?ஒவ்வொரு குழந்தைக்கும் தனியான பலம் உள்ளது. சில இடங்களில் அவர்கள் தங்களை முன்னேற்றிக்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் எவ்வாறு பலம் மற்றும் பலவீனத்தை கையாள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் அவர்களின் தனித்திறமைகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கான உதாரணமாக இருக்கும்.
(7 / 10)
நேர்மறையான வகுப்பறையை உருவாக்க நீங்கள் என்ன வழிகளை கையாள்கிறீர்கள்?நன்றாக கற்பதற்கு ஒரு நேர்மறையான வகுப்பறை சூழல் மிகவும் அவசியம். மரியாதை, ஒற்றுமை, ஒன்றாக செயல்படுவதற்கு, ஆசிரியர்கள் என்ன சூத்திரத்தை கடைபிடிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். இதை புரிந்துகொள்வது, நீங்களும் அதே மதிப்பீடுகளை வீடுகளில் பயன்படுத்த உதவும்.
(8 / 10)
எனது குழந்தையின் கற்றலுக்கு நான் எப்படி உதவ முடியும்?பள்ளி வகுப்பில் படிக்கும் சூழலை அப்படியே எப்படி வீட்டிற்கு கொண்டுசெல்ல முடியும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்த முடியும். எனவே செயல்பாடுகள், வளங்கள், வழிகள் என உங்கள் குழந்தைகள் பள்ளியில் கற்பதை நீங்கள் வீட்டிலும் கற்பிக்கும் வழிகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
(9 / 10)
எனது குழந்தையின் சமூகத்திறனை வளர்க்க நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள்?பள்ளி பாடங்களைப்போன்றே, சமூகத்திறன்களும் மிகவும் அவசியமானவையாகும். உங்கள் குழந்தைகளின் நட்பு வட்டம், வகுப்புத் தோழர்களுடன் அவர்கள் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்கள்.குழு நடவடிக்கைகளில் அவர்கள் எவ்வாறு பங்குகொள்கிறார்கள் என்று கேட்டுதெரிந்துகொள்வது, அவர்களின் சமூக வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள உதவும். அவர்களின் வளர்ச்சியில் நீங்கள் காட்டும் அக்கறையையும் காட்டுவதற்கு உதவும்.
(10 / 10)
உங்கள் கற்பித்தல் முறை குறித்து நான் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?ஒவ்வொரு ஆசிரியரும் தனித்தன்மையானவர். கல்வியை ஒவ்வொருவர் கையாளும் விதமும் வேறானது. எனவே அவர்களின் கற்றல் வழிமுறையை நீங்கள் பின்பற்றுவது உங்களுக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுக்கும். அதன் அடிப்படையில் நீங்கள் குழந்தைகளை மாற்றலாம்.
மற்ற கேலரிக்கள்