தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : பள்ளிவிட்டு வரும் குழந்தைகளிடம் என்ன கேட்கவேண்டும்? இதை படித்தால் புரியும்!

Parenting Tips : பள்ளிவிட்டு வரும் குழந்தைகளிடம் என்ன கேட்கவேண்டும்? இதை படித்தால் புரியும்!

Jun 17, 2024 06:00 AM IST Priyadarshini R
Jun 17, 2024 06:00 AM , IST

  • Parenting Tips : பள்ளிவிட்டு வரும் குழந்தைகளிடம் என்ன கேட்கவேண்டும்? இதை படித்தால் புரியும்!

குழந்தைகளிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும்? - குழந்தைகளின் உலகை புரிந்துகொள்வதற்கு அவர்களுடனான உறவை வலுப்படுத்துவதற்கு தினமும் அவர்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியம். சில எளிய கேள்விகள், அவர்களின் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை திறப்பதற்கான வழிகளாகும். இங்கு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் நாள் எப்படியிருந்தது என்பதை கடந்த கேள்விகள் அவை.

(1 / 9)

உனக்கு இன்று நடந்த மகிழ்ச்சியான நிகழ்வு என்ன? - நகைச்சுவைதான் உங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்கும் சிறந்த வழி. உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் வகுப்பில் நடந்த சில நகைச்சுவை நேரங்கள் குறித்து கேட்பதும், அவர்கள் அனுபவித்த நகைச்சுவை விஷயங்களை பகிரும்போது, அவர்களின் மனநிலை இலகுவாகும். மேலும் அவர்கள் வகுப்பில் நடந்த சிறிய காமெடியான விஷயங்களைக் கூட அவர்கள் பெரிய ஒன்றுபோல் எண்ணி மகிழ்வார்கள். இது அவர்களின் மகிழ்ச்சி மனநிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான வழிகளுள் ஒன்றாகும். இதுபோன்ற சில சிறிய விஷயங்களை அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். 

(2 / 9)

உனக்கு இன்று யார் உதவினார்கள்? அது உங்களுக்கு எப்படி இருந்தது?அன்பு, அனுதாபம் ஆகியவற்றை உங்கள் குழந்தைகளிடம் ஊக்குவிப்பது, உதவி செய்யும் மனநிலையை அங்கீகரிக்க துவங்குவதாகும். இந்த கேள்வி உங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நேர்மறையாக எதிர்வினையாற்ற உதவும். மற்றவர்களுடன் அவர்கள் என்ன உறவுநிலை கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள உதவும். அன்புடனும், மற்றவர்களுக்கு உதவிகரமாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவும். இது சுயமதிப்பு மற்றும் நன்றியுணர்வை வளர்த்தெடுக்கும்.

(3 / 9)

இன்று நீ கற்ற புதிய வார்த்தை என்ன? அதன் அர்த்தம் என்ன? - புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்வது உங்கள் குழந்தையின் வார்த்தை திறனை அதிகரிக்க உதவும். மேலும் அவர்கள் நன்றாக தொடர்புகொள்ள உதவும். இந்த கேள்வி, மொழி மீதான ஆர்வத்தை மட்டும் தூண்டாது. அவர்களின் கற்றல் திறனையும் அதிகரிக்கும். கற்றலில் ஆர்வத்தை தூண்டும். அவர்களின் மனதை எப்போதும் ஈடுபாடு மற்றும் செயல்பட வைக்கும். 

(4 / 9)

உன்னுடைய நாளில் நீ ஒன்றை மாற்ற விரும்பினால் அது என்ன? - இந்த கேள்வியை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கேட்கும்போது, அது அவர்கள் எதை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் சிந்தித்து எதிர்வினையாற்ற உதவும். நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை அவர்கள் எண்ணி அதுகுறித்து அவர்களுக்கு கற்பிக்கும். மாற்றம் மற்றும் வளர்ச்சியில் இது ஆரோக்கியமான கோணத்தை கட்டமைக்க உதவும். 

(5 / 9)

நாளை உனது இலக்கு என்னவாக இருக்கும்? - சிறிய மற்றும் சாதிக்கக்கூடிய இலக்குகள், உங்கள் குழந்தைகளுக்கு எந்த திசையில் செல்லவேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற உதவும். இந்த கேள்வி, திட்டமிடுதல் மற்றும் புதிய மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்நோக்கும் திறனை அவர்களிடம் வளர்த்தெடுக்கும். அது எத்தனை சிறியமு அல்லது பெரியதாக இருந்தாலும் சரி. இது அவர்களுக்கு அவர்களின் இலக்குகளை சாதிப்பதற்காக வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்புக்களை வழங்கும். உங்களுக்கு ஆதரவு தரும். 

(6 / 9)

நீ எதைப்பற்றி அறிந்துகொள்ள இப்போது ஆர்வமாக இருக்கிறாய்?குழந்தைகள் இயற்கையிலே ஆர்வமிக்கவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த கேள்வி அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து கற்கவும், அதை பரிசோதித்து பார்க்கவும் உதவும். இது அவர்களுக்கான வழியைக் காட்டும். அவர்களின் ஆர்வங்களை பகிர்ந்துகொள்ளவும், அவர்களின் ஆர்வங்கள் குறித்து ஊக்குவிக்கவும், புதிய செயல் அல்லது திட்டத்தில் இணைந்து செயலாற்றவும் உதவும்.

(7 / 9)

உனக்கு இந்த நாளில் பிடித்த பகுதி எது? - நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்துவது, உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். அவர்களுக்கு நன்றி மற்றும் நேர்மறை எண்ணங்களை பழகத்தூண்டும். இந்த கேள்வி அவர்களின் அந்த நாளின் முக்கியத்துவம் என்ன என்பதை பிரதிபலிக்க உதவும். அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கொடுத்தது என்று அவர்கள் பகிரட்டும். அது அவர்களுக்கும், உங்களுக்கும் இடையே சிறந்த பிணைப்பை உருவாக்கும். 

(8 / 9)

இன்று உன்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது எது? - வாழ்க்கை ஆச்சர்யங்களால் நிறைந்தது. இந்த கேள்வி குழந்தைகள் தங்களின் அனுபவங்களையும், எதிர்வினைகளையும், எதிர்பாராத நிகழ்வுகளையும் மீட்ருவாக்க உதவுகிறது. அந்த ஆச்சர்யமான நிகழ்வு குறித்து பகிரும்போது, அவர்களின் ஆச்சர்யம் இரட்டிப்பாகும். இது அவர்கள் கிரிட்டிக்கலாக சிந்திக்க உதவும். அவர்களின் நாள் குறித்த கதைகளை பகிர்ந்துகொள்ள உதவும். இல்லாவிட்டால், இவை குறித்து அவர்கள் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் போய்விடும். அவர்களின் உலகுக்கு தனித்துவமான நுண்ணறிவு வளர வழிவகுக்கும்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்