Parenting Tips : ஆரம்ப கால அனுபவங்கள், பெற்றோரின் சண்டைகள்! குழந்தைகளின் மூளையை பாதிக்கும் காரணிகள் இவைதான்!
- Parenting Tips : ஆரம்ப கால அனுபவங்கள், பெற்றோரின் சண்டைகள்! குழந்தைகளின் மூளையை பாதிக்கும் காரணிகள் இவைதான்!
- Parenting Tips : ஆரம்ப கால அனுபவங்கள், பெற்றோரின் சண்டைகள்! குழந்தைகளின் மூளையை பாதிக்கும் காரணிகள் இவைதான்!
(1 / 14)
Parenting Tips : ஆரம்ப கால அனுபவங்கள் முதல் பெற்றோர் போடும் சண்டைகள் வரை குழந்தைகளின் மூளையை பாதிக்கும் காரணிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(3 / 14)
குழந்தைப் பருவத்தில் மூளை வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு ஆதாரமான உணவு வகைகளும், சூழலையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமையாகும்.
(4 / 14)
உங்கள் குழந்தையின் மூளையை எண்ணற்ற விஷயங்கள் பாதிக்கும் - மரபணு முதல் ஆரம்ப கால அனுபவங்கள் வரை எண்ணற்ற விஷயங்கள் உங்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கும். அதுதான் உங்கள் குழந்தையின் மூளையை உருவாக்கும். அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வழிகோலுபவையாக இருக்கும். மேலும் அது அவர்களின நினைவாற்றல், உணர்வுகள் மற்றும் சமூக நலன் என அனைத்துக்கும் அடித்தளம் அமைப்பவையாக இருக்கும்.
(5 / 14)
மரபணு - மரபணு பண்புகள் உங்கள் குழந்தைகளின் மூளையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவையாகும். உங்கள் குழந்தையின் அமைப்பு, செயல்திறன் ஆகிய இரண்டும் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படக்கூடியவை. அது அவர்களின் நடத்தை முறைகளையும் பாதிக்கும்.
(6 / 14)
ஆரம்ப கால அனுபவங்கள் - உங்கள் குழந்தையின் ஆரம்ப கால அனுபவங்களும் உங்கள் குழந்தையின் மூளையை பாதிக்கும். அது உங்கள் குழந்தையின் மீது அக்கறை கொண்டவர்கள் அவர்களிடம் பேசுவது, மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், விளையாட்டுகளால் ஏற்படும் தூண்டுதல்கள் என மூளையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக மூளை வளரும் நேரத்தில் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடியவை.
(7 / 14)
ஊட்டச்சத்துக்கள் - போதிய ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக கர்ப்ப காலம் மற்றும் குழந்தைப்பருவத்தின் துவக்க காலத்தில் கொடுப்பது மிகவும் முக்கியம். அது போதிய மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், வைட்டமின்கள், மினரல்கள் என அனைத்தும் குழந்தையின் மூளை வளர்ச்சி, இயக்கம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக்கு உதவக்கூடியவை ஆகும்.
(8 / 14)
மனஅழுத்தம் - நாள்பட்ட மனஅழுத்தம் அல்லது வீட்டில் கிடைக்கும் துயர அனுபவங்கள், அதிர்ச்சி, புறக்கணிப்பு ஆகியவை மூளை வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும். இது மனஅழுத்தத்துக்கு எதிரான மனநிலைக்கு கொண்டு செல்லும். உணர்வு ரீதியாக ஒழுங்குபடுத்துதல் மற்றும் நினைவாற்றல் பற்றாக்குறைகள் போன்றவையும் மூளையை பாதிக்கக்கூடியவையாகும்.
(9 / 14)
சுற்றுச்சூழல் காரணிகள் - சுற்றுச்சூழல் காரணிகள், குறிப்பாக நச்சுப்பழக்கங்கள், மாசு ஏற்படுத்தும் காரணிகள் ஆகிய அனைத்தும் மூளையின் வளர்ச்சியை பாதிக்கும். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி மறறும் கற்றல் திறன்கள், நடத்தைகள் என அனைத்தையும் பாதிக்கும்.
(10 / 14)
பெற்றோர்களால் ஏற்படும் பாதிப்பு - பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பேசுவது, அவர்கள் மீது காட்டும் அக்கறை, பெற்றோர் – குழந்தைகளிடையே காணப்படும் உறவின் தரம் மற்றும் ஆழம் என அனைத்தும் குழந்தைகளின் மூளையை பாதிக்கும். அவர்களின் சமூக மற்றும் நினைவாற்றல் வளர்ச்சிக்கு அவை உதவும். இது மூளையின் அமைப்பு மற்றும் நரம்பு மண்டல வழிகளை அமைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
(11 / 14)
உடற்பயிற்சி - வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் பயிற்சிகள் உங்கள் குழந்தையின் மூளையில் உள்ள நரம்பியல் மரபணுக்களுக்கு உதவும். மூளை ஆரோக்கியத்துக்கு உதவி நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். கவனத்தை ஈர்க்கும். நினைவாற்றல் மற்றும் மனநிலையை முறைப்படுத்தும்.
(12 / 14)
உறக்கம் - போதிய மற்றும் தரமான உறக்கம் இல்லாவிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடு பாதிக்கப்படும். போதிய உறக்கம்தான், நினைவாற்றலை முறைப்படுத்தும் முக்கிய காரணியாகும். உணர்வுகளையும் முறைப்படுத்தும். ஒட்டுமொத்த மூளை மற்றும் நினைவாற்றல் திறன் செயல்பாட்டுக்கு போதிய உறக்கம் கட்டாயமான ஒன்று. அது இல்லாவிட்டால் சிரமம்.
(13 / 14)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:https://twitter.com/httamilnews https://www.facebook.com/HTTamilNews https://www.youtube.com/@httamil Google News: https://bit.ly/3onGqm9
மற்ற கேலரிக்கள்