“நான் எவனுக்கும்.. மோசமான சம்பவமும் வாழ்க்கைக்கு வேணும்.. அப்பத்தான்” -ஓவியா!
நாம் நம்முடைய வாழ்க்கையின் மீது மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எனக்கு அட்வைஸ் கொடுப்பதும் பிடிக்காது. வாங்குவதும் பிடிக்காது. - ஓவியா!
(1 / 6)
பிரபல நடிகையான ஓவியாவின் ஆபாச வீடியோ என்று கூறி, சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ குறித்து இன்ஸ்டாகிராமில் கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு “என் ஜாய்” என்று பதில் அளித்திருந்தார் ஓவியா. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஓவியா காவல்நிலையத்திலும் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாகவே எதைப்பற்றியும் கவலைப்படாதவர் ஓவியா. எதுவாயினும் முகத்திற்கு நேராக பேசும் அவரின் குணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. அந்த குணத்திற்காகவே அவருக்கு பெரும் ரசிகர் படை உருவானது. அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன், அவரிடம் பலர் நேர்காணல்கள் எடுத்தார்கள். அதில் அவர் வாழ்க்கையை தான் பார்க்கும் விதம் பற்றி பேசி இருந்தார். அதில் ஒரு பேட்டியை இங்கே பார்க்கலாம்.
(2 / 6)
இது குறித்து லிட்டில் டாக்ஸ் சேனலுக்கு பேசும் போது, “ எனக்கு எந்த விஷயம் குறித்து பயம் இல்லை. இவ்வளவு ஏன் பேய்களை பார்த்து கூட நான் பயந்தது இல்லை. ஆனால் சில மனிதர்கள் இதில் விதிவிலக்கு!என்னை முதுகில் குத்தியவர்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நாம் நம்முடைய வாழ்க்கையின் மீது மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எனக்கு அட்வைஸ் கொடுப்பதும் பிடிக்காது. வாங்குவதும் பிடிக்காது.அதே போல நான் பெரிய செலிபிரட்டி என ஃபீலை எனக்கும் கொடுக்கமாட்டேன். பிறருக்கும் கொடுக்க மாட்டேன். வதந்திகள் பற்றி நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. வதந்திகள் என்றாலே அது பொய்தானே. எனக்கு பிறர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க பிடிக்காது. ஆனால் என்னைப் பற்றி பேசுகிறவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.
(3 / 6)
டி.ஆர்.பிக்காககாரணம் அதில் அவர்களுக்கு ஒரு வித மனநிம்மதி கிடைக்கும். சிலர் காசுக்காக, டி.ஆர்.பிக்காக இது போன்று பேசுவார்கள். பொதுவெளியில் வந்தாலே இது போன்றவற்றை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆகையால் நீங்கள் என்னைப்பற்றி என்ன வேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளுங்கள் பேசிக்கொள்ளுங்கள். எனக்கு அது பற்றி கவலை இல்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். இந்த உலகத்தில் நான் என்னை மட்டும்தான் நம்புகிறேன். நான் இப்படி சொன்னாலும் எல்லா மனிதர்களையும் அப்படியே நம்பாமலும் இருக்க முடியாது.
(4 / 6)
ஆனாலும் எனக்கு யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் எனக்கு ஏமாற்றம் என்பது பெரிதாக இருக்காது. எனக்கு உண்மையாக இருப்பவர்களை மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா விஷயங்களில் இருந்தும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும். இன்னும் ஒரு படி மேல் போய் சொல்ல வேண்டுமென்றால், நமக்கு நிகழும் மோசமான சம்பவங்களில் இருந்து இன்னும் அதிகமாக நாம் கற்றுக்கொள்ள முடியும்.
மற்ற கேலரிக்கள்