Onam celebration pics: களரி முதல் கதகளி வரை…ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்
கேரள மாநிலத்தில் வாழும் மக்களின் பொதுவான பண்டிகையாக திருவோணம் கொண்டாடப்படுகிறது. மதங்களை கடந்த அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக அமைந்திருக்கும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது. மன்னர் மகாபலி திரும்பும் நிகழ்வை ஆண்டுதோறும் கொண்டாடும் நிகழ்வே ஓணம் பண்டிகையாகும்.
கேரள மாநிலத்தில் வாழும் மக்களின் பொதுவான பண்டிகையாக திருவோணம் கொண்டாடப்படுகிறது. மதங்களை கடந்த அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக அமைந்திருக்கும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது. மன்னர் மகாபலி திரும்பும் நிகழ்வை ஆண்டுதோறும் கொண்டாடும் நிகழ்வே ஓணம் பண்டிகையாகும்.
(1 / 10)
ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஓணம் சதயம் அமைந்துள்ளது. சுமார் 24 முதல் 26 பதார்தங்களுடன் உணவு தயார் செய்து பரிமாறப்படுவதை ஓணம் சதயம் என்று அழைக்கிறார்கள். இந்த உணவுகளில் இனிப்பு, உப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு உள்பட அறுசுவையும் இடம்பெற்றிருக்கும்
(2 / 10)
திருவோணம் திருநாளில் மாநிலம் முழுவதும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கேரள மாநிலத்தின் நடனமான கதகளி ஆட்டத்தை திருவணந்தபுரத்தில் நடன கலைஞர்கள் ஆடுகின்றனர்
(3 / 10)
பத்து நாள்கள் வரை கொண்டாடப்படும் ஓணம் திருவிழாவில் பாரம்பரியம் மிக்க படகு போட்டி நடைபெறும். ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆலப்புழாவில் நடைபெற்ற நேரு டிராபி படகு போட்டியின் புகைப்படம்
(5 / 10)
நாடு முழுவதும் பிற பகுதிகளில் வசிக்கும் மலையாளிகளால் ஓணம் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவி மும்பை நகரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளிகளின் பாரம்பரிய நடனத்தை ஆடிய கலைஞர்கள்
(6 / 10)
நவி மும்பை நகரில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் கேரளாவின் பாரம்பரிய கலையான களறிபயிற்று தற்காப்பு கலையை கலைஞர்கள் மேற்கொள்கிறார்கள்
(7 / 10)
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருக்காக்கரா கோயிலில் நடைபெற்ற 'பூரம்' ஊர்வலத்தில் மகரவிளக்கு அலங்காரத்துடன் யானைகள் பங்கேற்றன
(8 / 10)
ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான பூக்கள் அலங்காரத்தை அத்தப்பூக்கோலம் உள்ளது. வீடுகளில் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் பூக்கள் அலங்காரம் செய்து கோலமிடுவார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமை செயலகத்தில் பணியாற்றும் பெண்களின் அத்தப்பூக்கோலம் அலங்காரம்
(9 / 10)
திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் புலி வேடம் அணிந்து கலைஞர்கள் நடனமாடிய காட்சி
மற்ற கேலரிக்கள்