Weather Update : மக்களே உஷார்.. இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது.. முன்னெச்சரிக்கையாக இருங்க!
- Weather Update Today : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 6)
நேற்று முன்தினம் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (19.07.2024) காலை 05.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 08.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
(2 / 6)
இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (20.07.2024) அதிகாலை ஒரிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்க கூடும்.
(3 / 6)
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றுதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
(4 / 6)
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.(AP)
(5 / 6)
21.09.2024 முதல் 25.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.(AP)
மற்ற கேலரிக்கள்