நேரு வீட்டு மருமகன்.. மலையை மிஞ்சும் மகன் பாசம்.. திருச்சி குமரேசன் கோடீஸ்வரர் நெப்போலியனாக மாறியது எப்படி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நேரு வீட்டு மருமகன்.. மலையை மிஞ்சும் மகன் பாசம்.. திருச்சி குமரேசன் கோடீஸ்வரர் நெப்போலியனாக மாறியது எப்படி?

நேரு வீட்டு மருமகன்.. மலையை மிஞ்சும் மகன் பாசம்.. திருச்சி குமரேசன் கோடீஸ்வரர் நெப்போலியனாக மாறியது எப்படி?

Nov 13, 2024 06:42 AM IST Kalyani Pandiyan S
Nov 13, 2024 06:42 AM , IST

நான் நிறைய வேலைகள் செய்திருக்கிறேன். என்னுடைய மாமா கே என் நேரு மின்சாரத்துறை அமைச்சர் ஆக இருந்த போது, அவருக்கு பிஏவாக வாக வேலை பார்த்தேன். ஒரு நாள் என்னுடைய குருநாதர் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்தது.

திருச்சி குமரேசன் துரைசாமி எப்படி நெப்போலியனாக மாறினார் என்பது குறித்து நெப்போலியன் பேசி இருக்கிறார். இது குறித்து மிஸ்டர் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கும் அவர், “ என்னுடைய வீட்டில் மொத்தம் ஆறு பேர். மூத்தவர் அக்கா அதன் பின்னர் அண்ணன், அதன் பின்னர் இரண்டு அக்காக்கள். அதன் பின்னர் நான்; அதன் பின்னர் என்னுடைய தம்பி. நான் என்னுடைய வீட்டில் ஐந்தாவது பிள்ளை. என்னுடைய அப்பா வைத்த பெயர் குமரேசன். சிறு வயதில் இருந்தே கொஞ்சம் துணிச்சலான ஆள். கல்லூரி படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ரயில்வே துறையில் வேலை பார்த்தேன். 

(1 / 5)

நான் நிறைய வேலைகள் செய்திருக்கிறேன். என்னுடைய மாமா கே என் நேரு மின்சாரத்துறை அமைச்சர் ஆக இருந்த போது, அவருக்கு பிஏவாக வாக வேலை பார்த்தேன். ஒரு நாள் என்னுடைய குருநாதர் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக சினிமாவில் அறிமுகமானேன். இயக்குநர் எப்போதுமே ஆர் வரிசையில்தான், தான் அறிமுகப்படுத்தும் கலைஞர்களுக்கு பெயர் வைப்பார். இந்த நிலையில் அவர் என்னிடம், ஆர் வரிசையில் ஒரு 25 பெயர்களை எழுதிக் கொண்டு வா, அதில் உனக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். 

(2 / 5)

நான் அவர் சொன்னபடியே எழுதிக் கொடுத்தேன். ஆனால் அதில் அவருக்கு எந்தப் பெயரும் பிடிக்கவில்லை. இதனையடுத்து அவராக ஒரு பெயரை வைத்தார். அந்த பெயர் தான் நெப்போலியன். நெப்போலியன் என்பது ஒரு கிறிஸ்தவ பெயர். நாம் அடிப்படையில் நாம் ஒரு ஹிந்து. அப்படி இருக்கும் பொழுது குடும்பத்தினர் அந்த பெயரை ஒத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இன்னொரு விஷயம், நெப்போலியன் என்பது மதுபான வகையை குறிக்கும் பெயர். அப்படி இருக்கும் பொழுது, அதை வைத்து நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணமும் எனக்கு இருந்தது. இருப்பினும், பாரதிராஜா மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருப்பதால், அவரிடம் மறுத்து பேச என்னாலும், என் குடும்பத்தாலும் முடியவில்லை. 

(3 / 5)

பெயர் வைத்த உடன் அவர் என்னிடம், உனக்கு நான் வைத்த பெயர் உனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு நான் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நீங்களாக பார்த்து எந்த பெயரை வைத்தாலும், ஓகே தான் சார் என்று நான் சொல்லி விட்டேன்என்னுடைய நண்பர்கள் இந்த பெயரை குறிப்பிட்டு, உன்னுடைய இயக்குனருக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா என்று கேட்டனர். நான் அவர்களிடம் ரமேஷ், சுரேஷ் என்று வைத்து அது தமிழ் சினிமாவைச் சேர்ந்த பெயராக இருக்கும்.  சசி கபூர், அனில் கபூர் என்று வைத்தால் அது ஹிந்தி சினிமா ஹீரோவாக இருக்கும்.  நெப்போலியன் என்பது ஹாலிவுட் வரைச் செல்லும். அதை வைத்துதான் இயக்குநர் எனக்கு அப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார் என்று கூறி சமாளித்தேன். அன்று 90களில் விளையாட்டாக சொன்னேன். ஆனால் இன்று நான்கு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து விட்டேன். 

(4 / 5)

அப்படி அமைந்து விட்டது.அவர் பெயர் வைத்த ராசியோ என்னமோ தெரியவில்லை. எல்லாமே அப்படி அமைந்து விட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் என்னுடைய மகன் தனுஷ்தான். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் என்பது மிக மிக குறைவு. அவனை பள்ளிக்கு நாங்கள் தூக்கிக் கொண்டுதான் விடுவோம். பேருந்துகளில் அங்கே அவனால் சர்வ சாதாரணமாக ஏற முடியாது ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அவர்கள் இங்கு சகஜமாக செல்ல முடியும், வர முடியும். இதை சொல்லித்தான் அவன் அவனை அமெரிக்காவுக்கு செல்லுங்கள் என்று கேட்டான். அவனுக்காகத்தான் அந்த முடிவை நான் எடுத்தேன்” என்று பேசினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்