தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Madurai Murder : கொடூர தாய்.. தகாத உறவை பார்த்த 5 வயது மகள்.. கழுத்தை நெரித்து கொலை செய்து கிண்ற்றில் வீசிய அவலம்!

Madurai Murder : கொடூர தாய்.. தகாத உறவை பார்த்த 5 வயது மகள்.. கழுத்தை நெரித்து கொலை செய்து கிண்ற்றில் வீசிய அவலம்!

May 23, 2024 08:48 AM IST Divya Sekar
May 23, 2024 08:48 AM , IST

  • மேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவை தெரிந்து கொண்ட மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் உட்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலுார் அருகே ஆட்டுக்குளம் ஊராட்சி உலகநாதபுரத்தில் தகாத உறவை பார்த்த 5 வயது மகளை கொலை செய்து விட்டு காணவில்லை என நாடகமாடிய தாய், புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

(1 / 5)

உலகநாதபுரம் சமயமுத்து (30) துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி மலர்செல்வி (25). இவர்களது மகள்கள் கயல்விழி 7, கார்த்திகா 5. நேற்று முன்தினம் கார்த்திகாவை காணவில்லை என மேலுார் போலீசில் மலர்செல்வி புகார் அளித்தார்.

(2 / 5)

விசாரணையில் முன்னுக்கு முன் முரணாக மலர்செல்வி  பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் மகளை கொலை செய்தது மலர் செல்வி என்பது தெரியவந்தது. கார்த்திகாவை கள்ளக்காதலன் தர்மசுந்தருடன் 26, சேர்ந்து மலர்செல்வி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

(3 / 5)

மலர்செல்வி உறவினர் தர்மசுந்தர். கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இருவரும் நெருக்கமாக இருந்ததை பார்த்த கார்த்திகா, அப்பாவிடம் சொல்லப் போவதாக கூறியுள்ளார். இதனால் பயந்த இருவரும், கார்த்திகா கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அருகில் உள்ள கிணற்றில் வீசினர். 

(4 / 5)

மகளை காணவில்லை என நாடகமாடி உறவினர்களுடன் தேடுவது போல் நடித்தனர். தர்மசுந்தருக்கு சில நாட்களுக்கு முன்புதான் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது என போலீசார் கூறினர்.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்