14 ஆண்டுகள்.. ஒரு போட்டி கூட மிஸ் கிடையாது! அஸ்வின் நிகழ்த்திய டாப் தனித்துவ சாதனைகள்
- Ravichandran Ashwin Records: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பாதியிலேயே இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் முடிவில் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து >ஷாக் கொடுத்தார் இந்த ஸ்பின் பவுலிங் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின்
- Ravichandran Ashwin Records: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பாதியிலேயே இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் முடிவில் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து >ஷாக் கொடுத்தார் இந்த ஸ்பின் பவுலிங் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின்
(1 / 7)
2010 முதல் 2024 வரை தனது ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 7வது வீரர் என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் அஸ்வின்
(2 / 7)
இந்திய அணிக்காக 106 டெஸ்டில் விளையாடியிருக்கும் அஸ்வின், 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வினை விட இந்தியர்களில் அனில் கும்ப்ளே மட்டுமே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கும்ப்ளே 132 டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
(3 / 7)
அஸ்வின் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 37 முறை கைப்பற்றி, அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, உலகின் அனைத்து பந்துவீச்சாளர்களிலும் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் அஷ்வின், ஷேன் வார்னே ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் முத்தையா முரளிதரன் (67) உள்ளார்
(4 / 7)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இடது கை பேட்ஸ்மேன்களை வெளியேற்றிய உலக சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை மட்டும் மொத்தம் 268 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்
(5 / 7)
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 4 முறை ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதை நிகழ்த்திய முதல் இந்திய வீரராகவும் உள்ளார். உலக அளவில் அஸ்வினை விட, இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டரான இயான் போத்தம் ஒரே டெஸ்டில் மொத்தம் 5 முறை சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
(6 / 7)
டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற கூட்டு சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். அதன்படி மொத்தம் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கும் அஸ்வின், முத்தையா முரளிதரனுடன் இணைந்து இந்த சாதனையை பகிர்ந்துள்ளார்
மற்ற கேலரிக்கள்